மாதவனுக்கு ஜோடியாகும் அசுரன் நாயகி!
சென்னை : மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக பல வருடங்களாக கொடிகட்டி பறப்பவர் நடிகை மஞ்சு வாரியர்.
நீண்டகாலமாக தமிழில் இவரின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு அசுரன் படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுத்தார்.
இப்பொழுது மலையாளப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் மஞ்சு வாரியர் முதன்முறையாக மாதவனுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

பாராட்டுக்களையும் பெற்ற
எக்கச்சக்கமான மலையாள நடிகைகள் தமிழில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நீண்ட காலமாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை மஞ்சு வாரியர் சென்ற 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகத்தை கொடுத்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக இதில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற இவரை தமிழ் ரசிகர்கள் மேலும் பல படங்களில் காண ஆவலுடன் இருக்கின்றனர்.

சினிமாவில் ரீ-என்ட்ரி
இவரின் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை பெயர் சொல்லும் அளவிற்கு இருக்க அதில் குறிப்பாக "ஹவ் ஓல்ட் ஆர் யூ" படம் வரலாறு காணாத அளவிற்கு வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்த படம் தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நடிகை ஜோதிகா நடித்து திருமணத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து இந்த படமும் தமிழில் ஹிட்டடித்தது.

மரைக்காயர்
முன்னணி கதாநாயகியாக இருந்த போதும் அசுரன் படத்தில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்து மிரட்டி இருந்த மஞ்சு வாரியர் இப்பொழுது மலையாளத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதில் குறிப்பாக மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், தி பிரீஸ்ட்,படவெட்டு போன்ற படங்கள் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக உள்ளது.

மாதவனுக்கு ஜோடியாக
மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் கால் தடத்தைப் பதித்த மஞ்சு வாரியர் இப்போது பாலிவுட்டில் நடித்து அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் கல்பேஷ் இயக்கும் "அமெரிக்கி பண்டிட்" படத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு முதற்கட்டமாக போபாலில் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











