என் கூட நடிக்கனுமா.. கனவுல வேணும்னா நடக்கும்.. 2வது திருமணம் செய்த கணவருக்கு பிரபல நடிகை நச் பதில்!

Recommended Video

Manju Warrier Missed 96 Movie Chance? | Promo 1

சென்னை: தன்னுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த முன்னாள் கணவருக்கு பிரபல நடிகை நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் சல்லாபம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர, இந்த படத்திற்கு பிறகு 1998ஆம் ஆண்டு அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்.

குற்றம் கூறவில்லை

குற்றம் கூறவில்லை

விவாகரத்து ஆன கையோடு நடிகை காவ்யா மாதவனை நடிகர் திலீப் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் விவாகரத்தின் போதும் சரி, அவரது இரண்டாவது திருமணத்தின் போதும் சரி மஞ்சு வாரியர் திலீப் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் கூறவில்லை.

சிறைத்தண்டனை

சிறைத்தண்டனை


இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவரை கூலிப்படை மூலம் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் திலீப்.
85 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார் நடிகர் திலீப்.

தமிழிலும் அறிமுகம்

தமிழிலும் அறிமுகம்

அவரது முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள அவர், தற்போது தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த அசுரன் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்ந வண்ணம் உள்ளன.

விரோதம் இல்லை

விரோதம் இல்லை

இந்நிலையில் மலையாள தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டியளித்த திலீப், தன்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சுவாரியர் மீது தனக்கு கோபமோ விரோதமோ இல்லை என தெரிவித்தார்.

சேர்ந்து நடிக்க விருப்பம்

சேர்ந்து நடிக்க விருப்பம்

மேலும் அவருடன் மீண்டும் இணைந்து நடிக்கவும் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று கூறினார். பொருத்தமான கதை அமைந்தால் மஞ்சுவாரியருடன் சேர்ந்து நடிப்பேன் என்றார்.

மஞ்சு பதில்

மஞ்சு பதில்

திலீப்பின் இந்த பேட்டியை தொடர்ந்து மஞ்சு வாரியர் அவருக்கு என்ன பதில் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் திலீப்பின் விருப்பம் குறித்த கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்துள்ளார் மஞ்சு வாரியர்.

ஒருபோதும் நடிக்க மாட்டேன்

ஒருபோதும் நடிக்க மாட்டேன்

அதாவது தன்னுடன் திலீப் கனவில் வேண்டுமானால் நடிக்கலாம், நிஜத்தில் நடக்காது. நான் ஒருபோதும் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெற்றிப் பயணம்

வெற்றிப் பயணம்

நடிகை மஞ்சு வாரியர் திலீப்பின் ஆஃபரையும் விருப்பத்தையும் நிராகரித்துவிட்டார். திலீப் தன்னை விவாகரத்து செய்த பிறகு மஞ்சு வாரியரின் வாழ்க்கை எந்த சறுக்கலும் இல்லாமல் வெற்றி பயணமாகவே சென்று கொண்டிருக்கிறது.

காவ்யா மாதவனின் காதல்

காவ்யா மாதவனின் காதல்

ஆனால் திலீப்புக்குதான் எல்லாமே சறுக்கலாகி அதளப்பாதாளத்தில் விழுந்து விட்டார். திலீப், நடிகை காவ்யா மாதவனுடன் ஏற்பட்ட காதலாலேயே நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மஞ்சு வாரியரை திலீப் விவாகரத்து செய்த சம்பவம் மலையாள திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X