twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹிமாச்சல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர்

    |

    சென்னை: ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை மஞ்சு வாரியார் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டதாக அவரது சகோதரர் தகவல் வெளியிட்டதை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய மீட்புக் குழுவினர் மஞ்சு வாரியரையும் மற்றவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

    இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த இரண்டு வரமாக நடைப்பெற்றது.

    தற்சமயம் அங்கு சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதனால் திரைப்பட குழுவினர் 30 பேர் மற்றும் அந்த கிராமத்து மக்கள் மழையால் தவிக்கிறார்கள்.

    கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை

    வெள்ளத்தில் மஞ்சுவாரியார்

    வெள்ளத்தில் மஞ்சுவாரியார்

    நடிகை மஞ்சு வாரியர், இது பற்றி அவரது சகோதரர் மது வாரியரிடம் சேட்டிலைட் போன் மூலம் பேசியுள்ளனர். அவர்கள் அங்கு சிக்கி உள்ளது தெரிய வந்தது. நடிகை மஞ்சு வாரியர் பேசும் பொது, கடும் மழையால் அந்த கிராமத்தில் திரைப்பட குழுவினர் 30 பேர் உள்பட சுமார் 200 பேர் வரை கடுமையாக சிக்கிக்கொண்டு தவித்து வருகிறோம். எங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    மஞ்சுவாரியாருக்கு உணவு

    மஞ்சுவாரியாருக்கு உணவு

    இதனையடுத்து, நடிகை மஞ்சு வாரியரின் சகோதரர் மது வாரியர், மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள தன்னுடைய சகோதரி மஞ்சு வாரியார் மற்றும் அவர்களுடன் சேர்ந்து சிக்கிக் கொண்டவர்களுக்கும் உணவும் பிற அத்தியாவசிய பொருட்களும் கொடுக்க வேண்டும் என்று ஹிமாச்சல் பிரதேச அரசிடம் கேட்டுக் கொண்டார்.

    மஞ்சுவாரியார் மீட்பு

    மஞ்சுவாரியார் மீட்பு

    இதனை அடுத்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள அவர்களை மீட்பதற்கு உடனடி நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது. மீட்புப் படையினர் உடனடியாக களத்திற்கு சென்று நேற்று திரைப்படக் குழுவினர் மற்றும் கிராமத்து மக்களை மீட்டனர். இந்த தகவலை ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்தார்.

    கடும் மழை

    கடும் மழை

    ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இமாசல பிரதேசத்தில் மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.

    மழை வெள்ளம்

    மழை வெள்ளம்

    இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள திரைப்பட படப்பிடிப்பு ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த இரண்டு வரமாக நடைபெற்றது. இந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மஞ்சுவாரியாரும் படப்பிடிப்பு குழுவினரும் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Keral Actress Manju Warrier, who was involved in the shooting in Himachal Pradesh, was rescued by the rescue team immediately after her brother reported that he was caught in a flood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X