அஜித் கத்துக்கொடுத்த வித்தை.. ஆதாரம் காட்ட தயாரான துணிவுப்பட நாயகி!
சென்னை : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது துணிவு படம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் 11ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தற்போது 54 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது துணிவு படம். முன்னதாக தீபாவளியையொட்டி இநத்ப படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதன் சூட்டிங் தள்ளிப் போனது. தற்போது இந்தப் படம் பொங்கல் விருந்தாக, விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து ரசிக்களின் பார்வைக்கு வரவுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்
படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் அஜித் கூட்டணி அமைத்துள்ளார். முந்தைய இரு படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில், இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் பட்டாளம்
இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் என பல்வேறு இடங்களில் நடித்தப்பட்டுள்ள நிலையில், படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், பிக்பாஸ் பிரபலங்கள் அமீர் -பாவ்னி உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

54 மில்லியன் வியூஸ்களை கடந்த ட்ரெயிலர்
துணிவு படத்தின் ட்ரெயிலர் வெளியான சில தினங்களிலேயே 54 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் இதில் ஸ்கை சேசிங் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் இதில் நடித்திருப்பது அஜித் அல்ல என்றும் டூப் போட்டே இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து படத்தின் நாயகி மஞ்சு வாரியர் பேசுகையில், தனக்கு படத்தில் ஜெட் ஸ்கை ஓட்ட அஜித்தான் கற்றுக் கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் ஓட்டாத வாகனங்களே இல்லை என்றும் ஜெட் ஸ்கை காட்சியில் நடித்தது அஜித் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

த்ரில்லிங்கான ஸ்கை ஜெட் பயணம்
இந்தக் காட்சிகளில் நடித்தபோது மிகவும் த்ரில்லிங்காக இருந்ததாகவும் மேலும் இந்தப் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சூட்டிங் காட்சிகள் குறித்த வீடியோ ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகவும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவில்லை. மாறாக அவரது குழுவில் ஒருவராக நடித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. வலிமை படத்திலும் அஜித்திற்கு ஜோடியில்லை என்ற நிலையில் தற்போது துணிவு படத்திலும் அது தொடர்வது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











