அஜித்துடன் எடுத்துக் கொண்ட பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட மஞ்சு வாரியர்.. செம ஹாப்பி போல!

சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் வெளியான துணிவு படத்தில் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அஜித்தின் துணிவு படம்

அஜித்தின் துணிவு படம்

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 11ம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியானது துணிவு. கடந்த சில அஜித்தின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது துணிவு படம் தமிழ்நாட்டில் நல்ல விமர்சனங்களையும் முதல் நாளில் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு

ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இயக்கியுள்ளார் ஹெச் வினோத். போனிகபூர் தயாரிப்பில் துணிவு படம் வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் தொய்விற்கு காரணமான பல விஷயங்கள் இந்தப் படத்தில் கவனத்துடன் களையப்பட்டு கிரிஸ்ப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை இந்தப் படம் அணுகியுள்ளது.

வங்கி மோசடியை மையமாக கொண்ட படம்

வங்கி மோசடியை மையமாக கொண்ட படம்

வங்கியில் நடக்கும் மோசடிகளை எடுத்துக்காட்டும்வகையில் அந்த வங்கியிலேயே ஒரு குழுவுடன் அஜித் கொள்ளையடிப்பதாக கதைக்களம் காணப்படும் நிலையில், எதற்காக இந்தக் கொள்ளையில் அஜித் ஈடுபடுகிறார் என்பதாக க்ளைமாக்ஸ் காணப்படுகிறது. தனது முந்தைய படங்களின் விமர்சனங்களுக்கு தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத்தின்மூலம் இந்தப் படத்தில் பதிலடி கொடுத்துள்ளார் அஜித்.

சிறப்பான மஞ்சு வாரியர்

சிறப்பான மஞ்சு வாரியர்

தனி மனிதனாக இந்தப் படத்தை தனது தோள்களில் தூக்கி சுமந்துள்ளார் அஜித். ஆனால் அவருக்கு ஈடுகொடுத்து படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருக்கு க்ளைமாக்சில் மாஸான காட்சிகள் அமைந்துள்ளன. மேலும் தன்னுடைய பிஜிஎம்மால் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்

ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்

அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் சிறப்பான ட்ரீட்டைக் கொடுத்துள்ளது.இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகி மஞ்சு வாரியர் அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட பிரத்யேகப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் மிகவும் கலர்புல்லாக அமைந்துள்ளன.

விக்னேஷ் சிவனுடன் அடுத்தப்படம்

விக்னேஷ் சிவனுடன் அடுத்தப்படம்

துணிவு படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அஜித்திற்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது அடுத்தப் படத்தில் இணையவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் 17ம் தேதி துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X