முழங்காலில் அறுவைச் சிகிச்சை - மருத்துவமனையில் மனோரமா

முழங்கால் வலி காரணமாக கேரளாவுக்குப் போய் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார் மனோரமா. ஆனால் அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை, கால் வலியும் சரியாகவில்லை.
இதையடுத்து சென்னை திரும்பிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்கு முன்பு கொடுத்த மயக்க மருந்து தெளியாததால், அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா கண் விழித்தார். அவர் உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
actress நடிகை மனோரமா மயக்கம் மருத்துவமனை முழங்கால் அறுவைச் சிகிச்சை hospitalised knee surgery manorama


Click it and Unblock the Notifications