கண்ணம்மா மட்டுமல்ல இன்னும் பல.. மறக்க முடியாத மனோரமாவின் அசத்தல் படங்கள்!

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் பிறந்த நாளில் அவர் நடித்த அசத்தல் படங்கள் குறித்து ஓர் பார்வை..

Recommended Video

Thalaivan Irukkiran Exclusive Cast Update | Kamal Hassan, Vijay Sethupathi, Pooja Kumar

நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர் மனோரமா. ஆச்சி என திரைத்துறையினரால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மனோரமா 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

5000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அவரது இந்த சாதனைக்காக உலக புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

பத்மஸ்ரீ விருது, தேசிய விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகை மனோரமா நகைச்சுவை நடிகை, அம்மா, பாட்டி என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மனோரமாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் அவர் நடித்த சில படங்கள் குறித்து காண்போம்.

தில்லானா மோகனாம்பால்

தில்லானா மோகனாம்பால்

தில்லானா மோகனாம்பால் படத்தில் நாட்டியம் மற்றும் மேடை கூத்தாடும் பெண்ணாக ஜில் ஜில் ராமாமணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். சிவாஜியை அண்ணா அண்ணா என்று வாஞ்சையோடு அழைக்கும் மனோரமா சில காட்சிகளில் நடித்தாலும் சிவாஜி கணேசனுக்கு சரிசமமாக நடித்திருப்பார். அவர் பேசும் ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் இன்றும் ரசிக்கும்படியாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

 பாட்டி சொல்லை தட்டாதே

பாட்டி சொல்லை தட்டாதே

அடுத்து நடிகை மனோரமா ஸ்ட்ரிக்ட் பாட்டியாக நடித்து பட்டைய கிளப்பிய படம் பாட்டி சொல்லை தட்டாதே. நடிகர் எஸ் எஸ் சந்திரனுக்கு ஜோடியாகவும் பாண்டியராஜனுக்கு பாட்டியாகவும் நடித்திருப்பார். கண்ணில் கண்ணாடி, கையில் தடி, கழுத்து நிற நகை என பணக்கார பாட்டியாக நடித்து பலரின் கவனத்தையும் பெற்றிருப்பார் மனோரமா.

சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம் படம் இதில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் ஹீரோ அந்த வீடு என்றால் ஹீரோயின் மனோரமா தான். கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் பிச்சு உதறியிருப்பார். சம்சாரம் அது மின்சாரம் என்றதுமே நினைவுக்கு வரும் டயலாக் கண்ணம்மா.. கம்முனுக்கெட..

சின்னக்கவுண்டர்

சின்னக்கவுண்டர்

அடுத்து சின்னக்கவுண்டர் திரைப்படம்.. இந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு அம்மாவாக நடித்திருப்பார் மனோரமா. அந்தப் படத்தில் அவரது பல் வரிசை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. எமோஷனல், நகைச்சுவை, கோபம், தாபம், பாசம், பரிவு என அனைத்தையும் காட்டியிருப்பார் மனோரமா. சின்னக்கவுண்டர் படத்திலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

அடுத்து மனோரமா நடித்த ஜென்டில்மேன் படம். இந்தப் படத்தின் மூல ஆதாரமே மனோரமா என்று தான் சொல்ல வேண்டும். மகனின் படிப்புக்காக செலவுக்கு பணமில்லாத தாயாக, மகனின் படிப்பு செலவுக்காக தனது உயிரையே தீக்கு இரையாக்கும் தாயாக நடித்திருப்பார். படத்தில் இல்லாவிட்டாலும் தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரை படத்தின் கதை நகர காரணமாய் இருப்பார் மனோரமா.

எஜமான்

எஜமான்

அடுத்து எஜமான்.. நடிகர் ரஜினிகாந்துக்கு பாட்டியாக நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்திருப்பார் மனோரமா. இதிலும் நகைச்சுவை, சென்டிமென்ட் என பட்டையை கிளப்பியிருப்பார். குறிப்பாக ரஜினியின் நகைச்சுவை காட்சிகளில் சம பங்கை வகித்திருப்பார் மனோரமா.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

சின்னத்தம்பி படத்தில் நடிகர் பிரபுவுக்கு அம்மாவாக நடித்தார் மனோரமா. இந்தப் படத்தில் மகனுக்காக தவிக்கும் ஒரு தாயாக நடித்திருப்பார். க்ளைமேக்ஸ் காட்சியில் எதிராளிகளால் தான் துன்புறுத்தப்படும் போது கூட கட்டுப்பாட்டுடன் மகனுக்காக வாய்திறக்காமல் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மனோரமா.

மாடர்ன் பெண்

மாடர்ன் பெண்

அதுமட்டுமின்றி, சிங்கார வேலன், நடிகன், அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட பல படங்களில் மாடர்ன் பெண்ணாகவும் நடித்திருப்பர். நடிகை மட்டுமின்றி மனோரமா ஒரு சிறந்த பாடகியும் ஆவார். படங்களில் பெரும்பாலும் அவருக்கான பாடலை அவரே பாடி விடுவார். 80, 90களில் முன்னணியில் இருந்த நடிகர்களுக்கும் சரி இப்போது முன்னணியில் உள்ள நடிகர்களுக்கும் சரி அம்மா, பாட்டி கேரக்டர் என்றால் மனோரமாதான் இயக்குநர்களின் முதல் ஆப்ஷனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X