அந்த இயக்குனரால் எல்லாமே நாசமா போச்சு.. சினிமாவில் தலைகாட்டவே முடியல..அழுது புலம்பும் நடிகை!

சென்னை: தமிழில் விஜய், அஜித், பிரபு, அர்ஜூடன் நடித்தவர் நடிகை மந்த்ரா. தற்போது சினிமாவில் இருந்து காணாமல் போய் இருக்கும் இவர், இயக்குநர் ஒருவரால் சினிமா வாழ்க்கை பாழாய் போனதாகவும், தன்னுடைய சினிமா கேரியர் நாசமாக காரணமே அவர் தான் என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

நடிகை மந்த்ரா 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 20ந் தேதி பிறந்தார். 44 வயதாகும் நடிகை மந்த்ரா ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கோதாவரியில் பிறந்த இவர் தனது ஆறாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படத்தில் நடித்து வந்த இவர், வளர்ந்த பிறகு திரைப்படத்தில் தோழி, தங்கை என சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Manthra ajith

நடிகை மந்த்ரா: அதன்பிறகு, தமிழில் நடிகை மந்த்ரா, 1996 ஆம் ஆண்டு அருண் விஜய் ஜோடியாக 'பிரியம்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், மந்த்ராவிற்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அருண் விஜய்யுடன்:'பிரியம் படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கலாட்டா கல்யாணம், கொண்டாட்டம், புது குடுத்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் என்று பலத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்தனை தமிழ் படத்தில் மந்த்ரா நடித்த போதும், அவரால் ஒரு முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.

Manthra ajith

இதைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு பக்கம் சென்று நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை பெற்ற இவர், இங்கும் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். தொடர்ந்து ஒரு சில படங்களில் ஓவர் கவர்ச்சியாக நடித்த போதும், இவருக்கு படவாய்ப்பு வரவில்லை. இவர் கவர்ச்சியாக நடித்ததால், வந்து கொண்டிருந்த ஒரு சில வாய்ப்பும் வராமல் போய்விட்டது. இதையடுத்து 2005ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மந்த்ரா, குழந்தை பிறப்பிற்கு பின் மீண்டும் நடிக்க வந்தார்.

சின்னத்திரையில்: ரீ என்ட்ரி கொடுத்த நடிகை மந்த்ரா, அம்மா, அக்கா, மாமியார் என கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்பை தவறவிடாமல் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரின் உண்மையான பெயர் விஜயா என்றாலும், தெலுங்கு சினிமாவிற்காக ராசி என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதே போல தமிழ் சினிமாவில் மந்த்ரா என்கிற பெயரில் அறிமுகமானார்.

அந்த இயக்குநரால் நாசமா போச்சு: இந்நிலையில் நடிகை மந்த்ரா, தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழை விட தெலுங்கு திரையுலகில் நான் அதிகமான படத்தில் நடித்திருக்கிறேன். நான் 2003ஆம் ஆண்டு, மகேஷ் பாபு, ரவி தேஜா நடித்த நிஜம் என்கிற படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படம் தான் என் இமேஜையும், கேரியரையும் நாசமாக்கியது. அந்த படத்தில் நான் ரவி தேஜாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருப்பேன், அவரின் ஆசை நாயகியாக நடித்திருந்தார். இயக்குநர் இந்த படத்தின் கதையை என்னிடம் கூறும் போது வேறு மாதிரி கூறினார்.

Manthra ajith

ஆனால், படம் எடுக்கும் போது வேறு மாதிரி எடுத்து விட்டார். இதுகுறித்து நான் கேட்டேன். ஆனால், அட்வான்ஸ் வாங்கி விட்டதால், விருப்பமே இல்லாமல் அந்த படத்தில் நடித்தேன். அந்த படத்தோட என் சினிமா கேரியரே முடிந்துவிட்டது என்றார். அதே போல ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் மந்த்ரா, அப்படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்துக்கு ஆசை நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X