படுக்கையறை காட்சி.. ஒரே ஒரு படம் மொத்தமும் போச்சு.. புலம்பும் அஜித் பட நடிகை!
சென்னை: தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்த நடிகை மந்த்ரா இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். இயக்குநர் ஒருவரால் சினிமா வாழ்க்கை பாழாய் போனது, அவர் என்னிடம் சொன்ன கதை வேறு, ஆனால், படத்தில் என்னை ஆபாசமாக காட்டிவிட்டார். இதனால், சினிமா கேரியர் நாசமாக காரணமே அவர் தான் என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகை மந்த்ரா, அருண் விஜய் நடித்த 'பிரியம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அந்த படத்தில் இடம் பெற்ற தில்ருபா... தில்ருபா பாடல் மந்த்ராவை பிரபலமாக்கியது. அதைத் தொடர்ந்து, மந்த்ராவிற்கு தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படத்திலும் வாய்ப்பு வந்தது. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கலாட்டா கல்யாணம், கொண்டாட்டம், புது குடித்தனம், கண்ணன் வருவான் என அடுத்தடுத்து தமிழ் படத்தில் நடித்து வந்தார்

நடிகை மந்த்ரா: திடீரென இவர் குண்டானதால்,தெலுங்கு பக்கம் சென்றார், அங்கும் எதிர்பார்த்த படவாய்ப்பு வராததால்,கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். தொடர்ந்து ஒரு சில படங்களில் ஓவர் கவர்ச்சியாக நடித்த போதும், பெரியதாக படவாய்ப்பு வரவில்லை. இவர் கவர்ச்சியாக நடித்ததால், வந்து கொண்டிருந்த ஒரு சில வாய்ப்பும் வராமல் போய்விட்டது. இதையடுத்து 2005ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.

ரீ என்ட்ரி: பின் நீண்ட இடைவேளைக்கு பின் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை மந்த்ரா, அம்மா, அக்கா, மாமியார் என கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்பை தவறவிடாமல் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரின் உண்மையான பெயர் விஜயா என்றாலும், தெலுங்கு சினிமாவிற்காக ராசி என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டார். அதே போல தமிழ் சினிமாவில் மந்த்ரா என்கிற பெயரில் அறிமுகமானார்.

நடித்து இருக்கக்கூடாது: இந்நிலையில் நடிகை மந்த்ரா, ஆகாயம் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தெலுங்கில் அடுத்தடுத்து படத்தில் நடித்து கொண்டு இருந்தேன், அப்போது ஒரு பெரிய இயக்குநரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. படத்தின் பெயர் நிஜம், மகேஷ் பாபு ஹீரோவாக நடித்திருந்தார். இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, நீங்க வில்லனுக்கு காதலியாக தான் இருப்பீங்க, ஆனால் நீங்க தான் மெயின், உங்களை வைத்துத்தான் கதை நகரும் என்று சொன்னார். நானும் ஒகே சொல்லிவிட்டேன். படத்தின் முதல் காட்சியில் நடிக்கும் போதே எனக்கு தெரிந்துவிட்டது. இது விவகாரமான ரோல் என்று உடனே என் அண்ணனிடம், இந்த படம் வேண்டாம், அட்வான்சை திருப்பி கொடுத்துவிடலாம் என்று சொன்னேன்.
கேரியரே வீணா போச்சு: ஆனால், அண்ணன் அவசரப்படாதே படத்திற்கு ஓகே சொல்லிட்டு, அப்புறம் முடியாது என்று சொன்னால் சினிமாவில் உன் பெயர் கெட்டுவிடும் என்றார். இதனால், வேறு வழியில்லாமல் அந்த படத்தில் படுக்கை அறை காட்சி மற்றும் கவர்ச்சியாக நடித்தேன். அந்த ஒரே ஒரு படத்தால் என் கேரியரே வீணாகி விட்டது. அந்த பெரிய இயக்குநர் என்னை ஏமாற்றி விட்டார், இது தான் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











