உடம்பை எலி கடிச்சு திண்ணுருக்கு..என் புள்ளய திருப்பித்தரமுடியுமா? நடிகை மாயா கண்ணீர் பேட்டி!

சென்னை: என் புள்ள உடம்பை எலி கடிச்சு திண்ணுருக்கு, அவன் எப்போ செத்தானே தெரியலேயே என்று நடிகை மாயா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

actress maya son Vignesh Kumar aka Vicky, was found dead at his Chennai apartment recently

கவர்ச்சி நடிகையான மாயா சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பாபிலோனாவின் அத்தையான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, மகன் மற்றும் மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மர்ம மரணம்: இந்த நிலையில், நடிகை மாயாவின் மகன் விக்னேஷ், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளது.போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விக்னேஷ் மீது, பல குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடிகை மாயா பேட்டி: மகனை பறிகொடுத்த நடிகை மாயா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். என் மகன் மீது பல பொய் வழக்குகளை போலீசார் போட்டுள்ளனர். கடைசியில் என் மகன் மீது குண்டாஸ் வழக்கு போட்டு ஒரு வருஷம் ஜெயிலில் அடைத்தனர். இப்போது வெளியில் வந்த என் மகன் என் அம்மா வீட்டில் வசித்து வந்தான். அவன் வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே பழைய வழக்கு ஒன்றில் மீண்டும் விக்னேஷை குண்டாஸில் கைது செய்யப்போவதாக ஒரு செய்து வந்தது.

எலி கடிச்சு திண்ணுருக்கு: இந்த கவலையால் டென்ஷனாக இருந்த என் மகன் தொடர்ந்து 3 நாளாக குடிச்சிக்கிட்டே இருந்தான். திடீர்னு என்ன ஆச்சுனு தெரியல ஹார்ட் அட்டாக் வந்துதா...இல்லை கூட இருந்தவர்கள் எதாவது பண்ணிட்டாங்களானு தெரியல. என் புள்ளல கண்ண எலி கடிச்சு திண்ணுருக்கு, கைய கடிச்சு திண்ணுருக்கு, எப்போ செத்தானே தெரியவில்லை. அவனை நான் திங்கட்கிழமை தான் கடைசியாக பார்த்தேன்.

போலீசை சும்மா விடமாட்டேன்: என் மகனை ரௌடினு சொல்றாங்க அவன் நல்ல பையன், செத்த பிறகும் அவனை ரௌடினு சொல்றீங்களே என் மகனை உங்களால் திருப்பித் தரமுடியுமா? என் மகன் மீது பொய் வழக்கு போடுவேன் என்று அவனுக்கு மனரீதியாக தொல்லை கொடுத்த போலீஸ்காரர்களை நான் சும்மாவே விட மாட்டேன், என் மகனின் இறப்புக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று நடிகை மாயா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X