பிரபல நடிகையின் மகனுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.. சென்னை வடபழனியில் பயங்கரம்!

சென்னை: சென்னையில் பிரபல நடிகையின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

இவரது தாயார் கிருஷ்ண குமாரி. இவரும் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர்.

நடிகை மாயாவின் மகன்

நடிகை மாயாவின் மகன்

தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை பாபிலோனாவின் அத்தைதான் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ். 34 வயதான இவர் வேலை வெட்டிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதோடு கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்துக்கும் ஆளாகியுள்ளார்.

பல்வேறு வழக்குகள்

பல்வேறு வழக்குகள்

இந்நிலையில் விக்கி விருகம்பாக்கம் தசரதபுரம் 8வது தெருவில் உள்ள தனது பாட்டி கிருஷ்ண குமாரி வீட்டில் வசித்து வருகிறார். ஏற்கனவே விக்கி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் விருகம்பாக்கம் போலீசார் சரித்திர பதிவேடு அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

சரமாரி வெட்டு

சரமாரி வெட்டு

இந்நிலையில் நேற்றிரவு கிருஷ்ணா குமாரி வீட்டிற்கு சென்ற 8 பேர் கொண்ட கும்பல், விக்னேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் 10 இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த கிருஷ்ண குமாரி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வடபழனி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

40 தையல்

40 தையல்

இதில் அவரது உடம்பில் 6 இடங்களில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விக்கி, அப்பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் ஏற்பட்ட மோதல் கைக்கலப்பாக மாறியது.

பரபரப்பு

பரபரப்பு

இதனை தொடர்ந்து தனது கூட்டாளிகளுடன் வந்த கண்ணன், விக்கியை சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சாலிகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: maya மாயா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X