விக்ரம் படத்தில் ஒரே சீன் தான் - சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிவிட்ட நடிகை!

சென்னை: விக்ரம் திரைப்படத்தில் ஒரே சீன் வந்தாலும், சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிவிட்டார் நடிகை மாயா.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த சீனும், அந்த சிறிய சீனில் ஒளிந்திருந்த நகைச்சுவை, அன்பு, மெசேஜ் இவையெல்லாம் சோசியல் மீடியாவில் தற்போது செம்ம டிரெண்டில் வந்துவிட்டது.

குறிப்பாக அந்த சீனுக்கு அனிருத் போட்ட பின்னணி இசை இளைஞர்கள் மத்தியில் ஹாட் டாக் ஆகிவிட்டது.

அந்த ஒரு சீன்

அந்த ஒரு சீன்

நடிகை, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பாடகி எனப் பல திறமைகளைக் கொண்டவர் மாயா கிருஷ்ணன். திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டி வந்தார். நடிகர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும், ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்திலும் சிறிய ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் இவர் நடித்திருந்தார். அக்காட்சியில் கமல்ஹாசன் மற்றும் ஃபகட் பாசில் இவர்கள் இருவருடனும் நடித்திருக்கிறார். அக்காட்சி தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. துளி ஆபாசம் இல்லை என்றாலும் கூட குடும்பத்தோடு பார்க்கும் போது அக்காட்சி நிச்சயம் நெளிய வைக்கும் அது தான் அதன் ஸ்பெஷல்.

ஃலைப் டைம் அனுபவம்

ஃலைப் டைம் அனுபவம்

விக்ரம் படப்பிடிப்பின் போது தனக்கு கேரவன் கொடுத்து, தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட இயக்குநருக்கும், உதவி இயக்குநர்களுக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் மாயா. மேலும் கமல் மற்றும் ஃபகத்துடன் நடித்தது வாழ்நாள் அனுபவம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மீடூ சர்ச்சையில் சிக்கியவர்

மீடூ சர்ச்சையில் சிக்கியவர்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீடூ சர்ச்சையில் சிக்கியவர் மாயா கிருஷ்ணன். தன்னுடன் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த சக பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என செய்திகள் வெளியாகின. அப்பெண்ணும் மாயா தன்னை பாலியல் உறவுக்கு அழைத்தார் என சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்தார். என்றாலும் அப்புகாரை மறுத்து மாயா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அனிருத் பிஜிஎம்

அனிருத் பிஜிஎம்

சோஷியல் மீடியாவில் இக்காட்சியில் அனிருத்தின் பின்னணி இசை குறித்த ஒரு கற்பனை மீம் வைரலாகி வருகின்றது. இயக்குநர் லோகேஸ் அனிருத்திடம் இக்காட்சியில் பெண்ணின் முனகலுக்கு ஏற்ப பின்னணி இசையமையுங்கள் என்றாராம். அதற்கு அனிருத் அந்த முனகலையே பின்னணி இசையாகப் போட்டுத் தருகிறேன் என்று அதற்கு இசையமைத்தாராம். இப்படியாக ஒரு மீம் வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்து வருகின்றது. இன்னொரு தகவல் அந்த முனகலைப் பாடியவர் ஜோனிதா காந்தியாம். ஏற்கனவே அனிருத்துக்கும், ஜோனிதாவுக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என கிசுகிசு பரவியிருக்கும் நிலையில், இந்த பிஜிஎம் எரியும் கிசுகிசுவிற்கு மேலும் எண்ணெய் ஊற்றியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X