மன அழுத்தம்.. சுஷாந்தை தொடர்ந்து.. மேலும் ஒரு இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: மன அழுத்தம் காரணமாக இன்னொரு பிரபல நடிகர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Rhea Chakraborty manipulated Sushant Singh • 'புது திருப்பம்'

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை கதையில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மன அழுத்ததுக்கு மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் வீட்டில் இருந்து போலீசார் அதற்கான மருந்து சீட்டுகளை கைப்பற்றினர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு நடிகர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக மரணமடைந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா படப்பிடிப்புகள்

சினிமா படப்பிடிப்புகள்

கொரோனா காரணமாக, கடந்த 4 மாதமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிக்கலாகி இருக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதிகளில் அவர்கள் தங்கள் வேலையை தொடர்கின்றனர். இதற்கிடையே சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை என்பதால், ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

அசுதோஷ் பாக்ரே

அசுதோஷ் பாக்ரே

இதன் காரணமாக, அவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் பிரபல மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே (Ashutosh Bhakre) தனது வீட்டில் நேற்று தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. இவர் பகர், இசார் தர்லா பக்கா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மும்பையில் இருந்த இவர், லாக்டவுன் காரணமாக, தனது சொந்த ஊரான மகாராஷ்ட்டிர மாநிலம் நன்டேட் பகுதிக்கு வந்துள்ளார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அங்கு கணேஷ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் அவர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த சில நாட்களாக, மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சமீபத்தில், மனிதர்கள் ஏன் தற்கொலை பற்றி சிந்திக்கிறார்கள் என்று விவரித்து பேசி வீடியோ வெளியிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை மயூரி தேஷ்முக்

நடிகை மயூரி தேஷ்முக்

தற்கொலை செய்து கொண்ட அசுதோஷின் மனைவி மயூரி தேஷ்முக்கும், பிரபல மராத்தி நடிகை ஆவார். சில படங்களில் நடித்துள்ள இவர், டிவி தொடரில் நடித்து வருகிறார். மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அசுதோஷ் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் மறைவுக்கு மராத்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X