Actress Meena: கமலுக்கு மகளாக நடித்த மீனா.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகை மீனா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குழந்தை நட்சத்திரமாகவே ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ரஜினியுடன் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்து நாயகியாகவும் நடித்தவர். அந்த வகையில் கமல்ஹாசனுடனும் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் மகளாக யாத்கார் என்ற இந்திப் படத்தில் மீனா நடித்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

Kamal haasan Meena tamil cinema

நடிகை மீனா: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் தன்னுடைய கேரியரை துவங்கியவர். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் குறிப்பாக ரஜினிகாந்துடன் மீனா நடித்திருந்த அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு ஹிட் கொடுத்தது. தற்போதும் மீனா என்றால் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் முதலில் ரசிகர்கள் மனதில் வந்து செல்லும். அந்த வகையில் ஹீட்டடித்த இந்த படத்தில் அனாதை ஆசிரமத்தில் வளரும் மீனாவை நடிகராகவே வரும் ரஜினிகாந்த் தந்தையாக பார்த்துக் கொள்வதாக கதைக்களம் அமைந்திருந்தது.

அன்புள்ள ரஜினிகாந்த்: இந்தப் படத்தில் முத்து மணி சுடரே வா என்ற பாடல் இவர்கள் இருவருக்கும் இடையிலான பந்தத்தை சிறப்பாக வெளி காட்டியது. குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் மீனா நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா தொடர்ந்து அவருக்கே ஜோடியாக எஜமான் படத்தில் களம் இறங்கினார். இந்த ஜோடி மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. குழந்தையாக நடித்த மீனா ரஜினிக்கு ஜோடியாக ஒர்க் அவுட் ஆவாரா என்ற சந்தேகம் இயக்குனருக்கு முன்னதாக இருந்துள்ளது. இருந்தபோதிலும் இந்த ஜோடி மிகப் பெரிய கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியது.

கமலுக்கு மகளாக நடித்த மீனா: தொடர்ந்து முத்து, அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். குறிப்பாக முத்து படம் ரஜினிகாந்த் மற்றும் மீனா கேரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக அமைந்தது. நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் மட்டுமில்லாமல் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி படத்தில் மீனா ஜோடியாக நடித்திருந்தார். முன்னதாக கமல்ஹாசனுக்கு மகளாகவும் மீனா நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழில் இவர்கள் இருவரும் நடித்திருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் கவனத்தை ஈர்க்காமல் இருந்திருக்காது.

யாத்கார் படம்: ஆனால் கமல்ஹாசன் மற்றும் மீனா இருவரும் யாத்கார் என்ற இந்தி மொழி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாகவே மீனா நடித்துள்ளார். இவர்கள் இருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை விட மிகவும் சிறிய பெண்ணாக மீனா காணப்படுகிறார். கமல்ஹாசனுக்கு மகளாக நடித்துள்ள மீனா, அவ்வை சண்முகி படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X