நடிகை மீனாவின் அசத்தல் நடிப்பில் பட்டைய கிளப்பிய டாப் 5 தமிழ் படங்கள்.. என்னென்னன்னு பாருங்க!

சென்னை: நடிகை மீனாவின் நடிப்பில் வெளியான டாப் 5 படங்கள் குறித்து ஒர் பார்வை.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை மீனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

இதனை முன்னிட்டு, அவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட்டான டாப் 5 படங்கள் குறித்து பார்ப்போம். நடிகர் ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

முத்து படம்

முத்து படம்

முத்து படத்தில் மேடை நாடக கலைஞராக இருக்கும் நடிகை மீனா நடிகர் ரஜினிகாந்த் மீது காதல் கொள்வார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என பட்டையை கிளப்பியிருக்கும். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. இந்த படத்தில் ரஜினி - மீனாவின் கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது.

அவ்வை ஷண்முகி

அவ்வை ஷண்முகி

அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அவ்வை ஷண்முகி படத்தில் நடித்தார் மீனா. இந்தப் படத்தில் காதல் கணவருடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பிரிந்து வாழும் மனைவியாகவும் பிராமின் வீட்டு பெண்ணாகவும் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதில் நடிகர் கமல் ஹாசன் பெண் வேடத்தில் கலக்கியிருப்பார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும் சரி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

வானத்தைப் போல

வானத்தைப் போல

அடுத்து வானத்தைப் போல.. விஜயக்காந்த் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் இளம் வயது விஜயக்காந்துக்கு ஜோடியாகவும், கலக்கல் அண்ணியாகவும் பணக்கார வீட்டு மகளாகவும் ஏழை வீட்டு மருமகளாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படத்திலும் நடிகை மீனாவின் நடிப்பு பாராட்டை பெற்றது. குடும்பச்சித்திரமான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று பெரும் ஹிட்டானது.

ரிதம்

ரிதம்

அடுத்து ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாக ரிதம் படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மீனா. ஏற்கனவே செங்கோட்டை படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்த போதும், ரிதம் படத்தில் ஒரு விதவை தாயாக தனது ஆசைகளை துறந்து மகனுக்காகவும் மாமியாருக்காகவும் வாழும் தாயாக நடித்திருப்பார்.

Recommended Video

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளதா ?
நாட்டாமை

நாட்டாமை

அடுத்து நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நாட்டாமை படத்தில் பணக்கார வீட்டு பெண் என்ற ஆணவத்துடன் இருப்பது போன்று நடித்திருப்பார். இறுதியில் பல கோடிகளுக்கு அதிபதியான தனது அப்பா, நாட்டாமை குடும்பத்தாரிடம் காட்டும் மரியாதையையும் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்த்து புகுந்த வீட்டுக்கு ஏற்ற பெண்ணாக மாறுவார். இந்தப் படத்திலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X