"கண்ணழகி" மீனாவுக்கு இன்று பிறந்தநாள்.. திரையுலகினர் வாழ்த்து!

சென்னை : நடிகை மீனாவை பிடிக்காத ரசிகர்களே இல்லை அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த நடிகையாக இன்றுவரை வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் 1990 களில் முன்னணி நடிகைகையாவார்.

ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின் கதாநாயகியாக வெற்றி நடை போட்டார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என இவர் சென்ற இடமெல்லாம் வெற்றி என நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை மீனா செப்டம்பர் 16 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் அதே சமயம் இவருக்கு ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கச்சிதமான ஜோடியாக

கச்சிதமான ஜோடியாக

பெயருக்கு ஏற்றார் போல அழகிய கண்கள், அசாத்தியமான நடிப்புத் திறமை, எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கு கச்சிதமான ஜோடியாக பொருந்தும் வெகு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீசை கலக்கி வந்த நிலையில் இவர் முதன் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த என் "நெஞ்சங்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர் தமிழில் அன்புள்ள ரஜினிகாந்த், தீர்ப்புகள் திருத்தப்படலாம், பறவையின் மறுபக்கம், சுமங்கலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர்.

என் ராசாவின் மனசிலே

என் ராசாவின் மனசிலே

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்தியமான நடிப்புத் திறமையின் மூலம் அசத்தி வந்த மீனா கதாநாயகியாக முதன்முதலில் தெலுங்கில் அறிமுகமாகி இருக்க, தமிழில் "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தெலுங்கு ரசிகர்களையும்

தெலுங்கு ரசிகர்களையும்

தெலுங்கில் வெளியான "சீதாராமய்யா காரி மணவராலு" திரைப்படத்தில் நடித்ததற்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்ததைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் தொடர்ந்து கவர்ந்து வந்தார்.

கலக்கு கலக்கினார்

கலக்கு கலக்கினார்

மேலும் இந்தியிலும் தனது காலடி பதித்த இவர் "பர்தா ஹய் பர்தா" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்தார். எனினும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த மீனா, ரஜினிகாந்த் நாகர்ஜுனா, சிரஞ்சீவி, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், வெங்கடேஷ் மற்றும் மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தென் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கினார்.

நம்பர் ஒன் நடிகையாக

நம்பர் ஒன் நடிகையாக

தமிழில் வெளியான எஜமான், சேதுபதி ஐபிஎஸ், முத்து, வீரா, தாய்மாமன் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவியத் தொடங்கி நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார்.

 பல ஆண்டுகளுக்குப் பிறகு

பல ஆண்டுகளுக்குப் பிறகு

திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து சற்று தள்ளியே இருந்த மீனா மீண்டும் அதிரடியாக "திரிஷ்யம்" உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்ததை அடுத்து இப்பொழுது மீண்டும் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கும் "அண்ணாத்த" திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரோலின் காமாட்சி

கரோலின் காமாட்சி

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெப்சீரியஸ்கலிலும் கலக்கி வரும் மீனா சமீபத்தில் வெளியான "கரோலின் காமாட்சி" என்ற வெப்சீரியஸில் நடித்து ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருந்தார்.

திரைப்பிரபலங்கள் வாழ்த்து

திரைப்பிரபலங்கள் வாழ்த்து

நம்பர் ஒன் நடிகையாக தென்னிந்தியாவில் கலக்கி வந்த நடிகை மீனா மீண்டும் இப்பொழுது திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் அதேசமயம் செப்டம்பர் 16 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் அதே சமயம் இவரது ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X