சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்த நடிகை மீனா.. கொண்டாட்டம் இல்லாமலா!
சென்னை : நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை 1980களில் துவங்கினார்.
தொடர்ந்து 1990களில் நாயகியாக அறிமுகமாகி, முன்னணி ஹீரோயினாக தென்னிந்திய மொழிகளில் வலம்வந்தார்.
தற்போது வரை தன்னுடைய திரையுலக பயணத்தை தொடர்ந்து வரும் மீனா திரையுலகில் தன்னுடைய 40 ஆண்டுகளை கடந்துள்ளார்.

நடிகை மீனா
நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். நடிகர் ரஜினிகாந்த்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார் மீனார்.

தமிழில் நாயகியாக அறிமுகம்
தொடர்ந்து ராஜ்கிரணுடன் இணைந்து நாயகியாக தமிழில் என்ட்ரி கொடுத்த என் ராசாவின் மனசிலே படம் மீனாவிற்கு மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. தொடர்ந்து, ரஜினியுடன் எஜமான் படத்தில் மீனா ஏற்று நடித்திருந்த வைத்தீஸ்வரி கேரக்டர் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி
அடுத்தடுத்து, கமல்ஹாசன், அஜித், பார்த்திபன், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் களமிறங்கிய மீனாவிற்கு தொடர்ந்து அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார் மீனா.

2009ம் ஆண்டில் திருமணம்
தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த மீனாவிற்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய், அரவிந்த் சாமி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார் நைனிகா. குறிப்பாக தெறி படம் இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தது.

சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்த மீனா
இந்நிலையில் மீனா திரையில் நடிக்கத் துவங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் மீனா 40 என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டரில் ட்ரெண்டிங்
நடிகை மீனா 40 ஆண்டுகளை திரையுலகில் கடந்த நிலையில், தற்போதும் ரஜினி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக #Meena40 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











