For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “எனக்கு மட்டும் ஏன் இப்படி“.. கதறி அழுத மீனா..உடைந்து போன தோழி !

  |

  சென்னை : நடிகை மீனாவை தேற்றவே முடியவில்லை அவர் மனமுடைந்து நிற்பதை பார்க்கும் போது மனம் கலக்கமடைகிறது என மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் கூறியுள்ளார்.

  குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய மீனாவின் நடிப்பும், வெகுளித்தமான பேச்சும் தமிழ் ஆடியன்சுக்கு பிடித்து போனதால் இன்று வரை பிரபலமான நடிகையாகவே இருக்கிறார். நடிகை மீனாவுக்கு கண்ணழகி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நடிப்பில் அசத்துவதை விட ஒரே ஒரு கண்ணசையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தும்சமாக்கி விடுவார்.

  Recommended Video

  Meena | என் அன்பான கணவரை இழந்து வாடுகிறேன்... *Kollywood | Filmibeat Tamil

  தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்த போதே, 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டியில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

  பாக்கியலட்சுமி தொடர்ல அடுத்த மூணு வாரம் இப்படித்தான் இருக்கப்போகுது.. நவரசங்களை பார்க்க தயாராகுங்க! பாக்கியலட்சுமி தொடர்ல அடுத்த மூணு வாரம் இப்படித்தான் இருக்கப்போகுது.. நவரசங்களை பார்க்க தயாராகுங்க!

  நடிகை மீனா

  நடிகை மீனா

  நடிகை மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, இருவரும் குணமடைந்த நிலையில், வித்யாசாகருக்கு நுரையீரல் அதிக அளவு பாதிக்கப்பட்டது. அவர் கொரோனாவிலிருந்து இருந்து மீண்டாலும் அவரின் நுரையீரல் பாதிப்பை சரி செய்ய முடியவில்லை. இதனால், அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  உறுப்புகள் செயலிழந்தன

  உறுப்புகள் செயலிழந்தன

  நுரையீரல் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் உதவியுடன் கடந்த 6 மாதம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் இருதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டு உறுப்புகள் செயலிழந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உடல் உறுப்பு தானம் பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், உடல் உறுப்பு சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழந்தார்.

  இறுதிச்சடங்கு

  இறுதிச்சடங்கு

  மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தியை கேள்விபட்ட, அவரது நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் முதல் ஆளாக வீட்டிற்கு வந்து மீனாவிற்கு ஆறுதல் கூறினார். அதே போல ரஜினிகாந்த், ரம்பா, குஷ்பு, பிரசன்னா, மன்சூர்அலிகான், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் நேரில் வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறினார்கள். வித்யாசாகரின் இறுதிச்சடங்குகள் அனைத்தையும் மீனாவே செய்தார். அவரது குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாததால் அனைத்தையும் அவரே செய்தார்.

  கோவில் கோவிலாக

  கோவில் கோவிலாக

  இறுதி சடங்குக்கான அனைத்து வேலைகளையும் மீனாவின் தோழியான நடன இயக்குனர் கலா மாஸ்டர் உடன் இருந்து கவனித்துக் கொண்டார். இதையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கலா மாஸ்டர், மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகரை மீனா என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து காப்பாற்றி வந்தார். ஹாஸ்பிடல், கோவில் என இந்த மூன்று மாதம் மீனா ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்.

  எனக்கு மட்டும் ஏன் இப்படி

  எனக்கு மட்டும் ஏன் இப்படி

  மீனா எப்போதும் குழந்தை மாதிரி சிரித்துக்கொண்டே இருப்பார். இவரை கண்ணீருடன் பார்க்கவே ரொம்ப கஷ்டமான இருக்கு. மீனா வித்யாசாகரும் ரொம்ப பொருத்தமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து போவார்கள். மீனா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு கேட்டு கதறி அழுத வார்த்தையை கேட்கும் போதே என்னால் தாங்க முடியவில்லை. அப்படியே மனசு உடைந்துபோய்விட்டது. இன்னும் அவரால் இதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை அதுவரை தோழியா மீனாவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ உடனிருந்து செய்வேன் என்றார் கலா மாஸ்டர்.

  English summary
  Actress Meena crying for her husband vidyasagar
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X