நான் தடுப்பூசி போட்டாச்சு... நீங்க போட்டாச்சா... நடிகை மீனா !
சென்னை : நடிகை மீனா கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் நான் முழுமையாக தடுப்பூ செலுத்திக் கொண்டேன் நீங்கள் என்று கேட்டுள்ளார்.
நடிகர்-நடிகைகள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்

32 கோடிக்கும் கூடுதலாக
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவது மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது, இதனால் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 32 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

புதிய இணையதளம்
கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 'சென்னை இன்னோவேஷன்ஹப்'சார்பில்மாநகராட்சிஇணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/covid-details/ என்ற புதிய இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, யோகிபாபு, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு மற்றவர்களையும் தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

2வது டோஸ்
அந்த வகையில் நடிகை மீனா கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் , நான் முழுமை தடுப்பூசி போட்டுக்கிட்டேன் நீங்க என்று தலைப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











