நடிகை மீனா சொன்ன பொய்.. கண்கலங்கிய கலா மாஸ்டர்.. என்னதாங்க நடந்துச்சு!

சென்னை : நடிகை மீனா மற்றும் கொரியோகிராபர் கலா மாஸ்டர் இருவரும் மிக நெருங்கிய தோழிகளாக கோலிவுட்டில் இருந்து வருகின்றனர்.

மீனா சமீபத்தில் தன்னுடைய கணவரை இழந்தபோது அவருடன் சில தினங்கள் கூடவே இருந்து கலா மாஸ்டர் அவரை தேற்றிவிட்டுதான் வீடு திரும்பினார்.

தொடர்ந்து மீனாவின் சுக துக்கங்களில் பெருமளவில் பங்கெடுத்து வருகிறார் கலா மாஸ்டர்.

மீனா -கலா மாஸ்டர் நட்பு

மீனா -கலா மாஸ்டர் நட்பு

நடிகை மீனா மற்றும் கொரியோகிராபர் கலா மாஸ்டர் இருவரும் கோலிவுட்டில் மிக நெருங்கிய தோழிகளாக உள்ளனர். இருவரும் தங்களது சுக துக்கங்களில் பெருமளவு பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த போது கலா மாஸ்டர் மீனாவுடனேயே தங்கியிருந்து அவரை தேற்றினார்.

கைக்கொடுத்த கலா மாஸ்டர்

கைக்கொடுத்த கலா மாஸ்டர்

தொடர்ந்து மீனா தனது வீட்டிலேயே முடங்கிய நிலையில், ரம்பா, சங்கவி, சங்கீதா உள்ளிட்டவர்களும் தங்களுடைய குடும்பத்தினருடன் சென்று அவருக்கு ஆறுதலாக இருந்தனர். ஆயினும் வித்யாசாகர் இறப்பின்போது கூடவே இருந்த கலா மாஸ்டரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

18வது திருமண நாள்

18வது திருமண நாள்

இந்நிலையில் நேற்றைய தினம் கலா மாஸ்டர் தன்னுடைய 18வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். முந்தைய நாள் பேசிய மீனா, தான் ஊரில் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் தன்னுடைய முக்கியமான இந்த நாளில் தன்னுடைய தோழி உடன் இல்லையே என்று கலா மாஸ்டர் வருத்தம் அடைந்துள்ளார்.

 மீனா சர்ப்ரைஸ் விசிட்

மீனா சர்ப்ரைஸ் விசிட்

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகை மீனா, கலா மாஸ்டரின் திருமண நாள் விழாவிற்கு திடீரென விசிட் கொடுத்து அசத்தியுள்ளார். மீனாவின் இந்த திடீர் வருகை, கலா மாஸ்டருக்கு ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் கண்கலங்கியபடி மீனாவை எதிர்கொண்டார்.

மீனா சொன்ன பொய்

மீனா சொன்ன பொய்

இந்நிலையில் இந்த கொண்டாட்டத் தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கலா மாஸ்டர், மீனா தான் ஊரில் இல்லை என்று பொய் சொல்லியுள்ளதாகவும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இது தனக்கு மிகச்சிறந்த கிப்ட் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான நட்பு

சிறப்பான நட்பு

சந்தோஷ தருணங்களில் பங்கேற்பதற்கும் துக்கமான நேரங்களில் கைக்கொடுப்பதற்கும்தான் நட்பு தேவைப்படுகிறது. பரபரப்பான சினிமாத் துறையில் இருந்தாலும் நடிகை மீனாவிற்கு இத்தகைய நட்பு அதிகமாக உள்ளதை அவருடைய கணவரின் மறைவின்போது தான் அதிகமாக பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X