கேரளா ஸ்டைலில் பிரம்மாண்ட மாளிகை.. மீனாவின் ஹோம் டூர்.. அசந்துபோன ஃபேன்ஸ்!

சென்னை: சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நடிகை மீனாவிற்கு, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. அந்த வீட்டை கேரள முறைப்படி மீனா கட்டி உள்ளார். தற்போது மீனாவின் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் அசந்து போய் வீடா... இல்லை அரண்மனையா என கேட்டு வருகின்றனர்.

துருதுரு பார்வை அழகான கண்ணுடன் இருந்த மீனாவை, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், திருமணவிழாவில் பார்த்தார். க்யூட்டா அழகு தேவதைப்போல இருந்த மீனாவை பார்த்ததும் சிவாஜிக்கு மனதில் பொறிதட்ட நெஞ்சங்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் மீனாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுக்கு அடையாளம் கொடுத்த படம் தான் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினி அங்கிள் என சூப்பர்ஸ்டார் மீது அலாதி பிரியம் கொண்ட குட்டி ரசிகையாகவே நடித்து அசத்தி இருந்தார் மீனா.

Meena Home tour net worth

என் ராசாவின் மனசிலே: இப்படி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த மீனாவை சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது நடிகர் ராஜ்கிரண் தான். இதையடுத்து, என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து மீனாவை புகழின் உச்சியில் ஏற்றிவிட்டது.

கொடி கட்டி பறந்த மீனா: இதன்பின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த மீனா, எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு மீனா மற்றும் ரஜினி இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணமாக இருந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

கணவர் இறந்தார்: மீனாவின் கணவர் வித்யா சாகருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது இவர் ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். அதே போல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

அரண்மனை போல வீடு: இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தனது வீட்டை சுற்றிக்காட்டி உள்ளார். கேரள பாரம்பரிய ஸ்டைலில் கேரளா அரண்மனை போல வீடு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. மேலும், கார்டனில் விதவிதமான செடிகள், பூந்தோட்டம், அடுக்கு மல்லி செடி என அனைத்தையும் வைத்து அதை பராமரிப்பதற்காக தனி ஆட்களை வைத்துள்ளார். மேலும், அங்கு கற்களால் ஆன சிற்பங்களும் உள்ளன. 6க்கும் மேற்பட்ட அறைகள், மினி தியேட்டர், ஸ்விம்மிங் பூல் என அனைத்தையும் வீட்டில் வைத்து இருக்கிறார் மீனா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சுகொட்டி ரசித்து பார்த்து வருகின்றனர்.

சொத்து: மீனாவின் கணவர் வித்யாசாகர், ஒரு பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்தார். அவருக்கு மாத சம்பளமே 3 அல்லது 4 லட்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் மீனாவும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்ததால், அந்த பணத்தை அப்படியே பேங்க்கில் டெபாசிட் செய்துள்ளார். இதனால், அவரின் பேங்க் பேலன்ஸ் பல கோடி இருக்கும் என்றும், அவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடியில் இருந்து 40 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X