twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை மீனாவின் கணவர் உயிரிழக்க காரணம் இதுதான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறிய தகவல்!

    |

    சென்னை : நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழக்க முக்கிய காரணம் இதுதான் என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

    Recommended Video

    Meena Husband இறுதிச்சடங்கு..முன்னின்று நடத்தும் பிரபலங்கள்*Celebrity

    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இவர் கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.

    ஸ்கூல் படிக்கிறப்ப இந்த நடிகை பாக்குறதுக்காகவே ஹோட்டலுக்கு போவேன்...கார்த்தி சொன்ன செலிபிரிட்டி யார்?ஸ்கூல் படிக்கிறப்ப இந்த நடிகை பாக்குறதுக்காகவே ஹோட்டலுக்கு போவேன்...கார்த்தி சொன்ன செலிபிரிட்டி யார்?

    கொரோனா

    கொரோனா

    கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் நான்காவது அலை வந்து விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், மீண்டும் கொரோனா பரவினால் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்ற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

    நுரையீரல் பாதிப்பு

    நுரையீரல் பாதிப்பு

    இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம்

    நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம்

    அவரது உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பும் தீவிரமடைந்ததை அடுத்து வித்யாசாகர் உடல்நிலை மோசமானதால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் காலமானார்.

    இறப்புக்கான காரணம்

    இறப்புக்கான காரணம்

    இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில், முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், நடிகை மீனாவின் கணவர் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் கடந்த ஆறுமாதமாக உடல்நலம் சரியில்லாமல் உள்ளதாகவும், உறுப்பு தானம் பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டும் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

    நேரில் அஞ்சலி

    நேரில் அஞ்சலி

    ரஜினிகாந்த், பிரபுதேவா, ரம்பா குடும்பத்தார், விஜயகுமார் குடும்பத்தார், சேரன், மன்சூர் அலிகான், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, குஷ்பு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    English summary
    New information about Actress meena husband Vidyasagar death given by minister ma subramanian
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X