ஐஸ்வர்யா ராய் மேல பொறாமையா இருக்கு.. பொன்னியின் செல்வன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகை மீனா!

சென்னை : பொன்னியின் செல்வன் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் கேரக்டர்கள் தேர்வு உள்ளிட்டவை மிரட்டலான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் உருவாக்கம் உள்ளிட்டவற்றிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி, ஜெயராம், விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் உருவாக்கம், காட்சி அமைப்புகள் ஆகியவை மிரட்டலாக அமைந்துள்ளது. இத்தகைய பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பு மணிரத்னம் எப்படி 150 நாட்களில் முடித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளார்.

கல்கியின் படைப்பு

கல்கியின் படைப்பு

அமரர் கல்கியின் இந்தப் படைப்பு நாவலாக வந்தபோதே மிரட்டலாக அமைந்தது. ரசிகர்கள் அவரது மயக்கும் எழுத்து நடையை கொண்டாடினார்கள். அந்த வகையில் தற்போது இந்த காவியத்திற்கு மணிரத்னம் எப்படி திரைவடிவம் கொடுத்திருப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. ரசிகர்களின் இந்தக் கேள்விக்கு தற்போது விடை கொடுத்துள்ளார் மணிரத்னம்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தப் படத்தின் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சர்வதேச அளவில் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மணிரத்னத்திற்கு மட்டுமில்லாமல் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்த அனைவருக்கும் இது ட்ரீம் பிராஜெக்ட்தான்.

மீனா வாழ்த்து

மீனா வாழ்த்து

இந்தப் படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரும் தொடர்ந்து சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை மீனாவும் இந்தப் படத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

மீனா பொறாமை

மீனா பொறாமை

தான் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கேரக்டரின்மீது மிகுந்த பொறாமை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தான் நீண்ட நாட்கள் மறைத்து வைக்க முடியாது என்றும் கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் தான் முதல் முறையாக ஒருவர்மீது பொறாமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனாவின் கனவு கேரக்டர்

மீனாவின் கனவு கேரக்டர்

தன்னுடைய கனவு கேரக்டரான நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களையும் தனித்தனியாக குறிப்பிட்டு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X