நீண்ட இடைவெளி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நடிகருடன் இணையும் பிரபல நடிகை.. ஆனா அம்மா கேரக்டராமே!
Recommended Video
சென்னை: தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கவுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்து தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள்.

படம் குறித்த தகவல்கள்
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்த வண்ணம் உள்ளன.

நடிகர் சூரி
பெயரிடப்படாத அந்தப் படம் தலைவர் 168 என குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். அதேபோல் நடிகர் சூரி படத்தில் இணையவுள்ளார் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் ரஜினியுடன்
இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிகை மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, ரஜினியின் 168வது படத்தில் சிறு வயது ரஜினிக்கு அம்மாவாக நடிக்கிறார் மீனா என்று கூறப்படுகிறது.
உறுதிப்படுத்தும் தகவல்
இதனை உறுதிப்படுத்தும் வகையில் டிவிட்டரில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
அம்மாவாகவா..
மீனா ரஜினிக்கு அம்மாவாக நடிக்கவுள்ளார் என பெரும் கவலையுடன் டிவிட்டியிருக்கிறார் இவர்.

ஜோடியாக..
நடிகை மீனா, ரஜினியுடன் குழந்தையாக அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக முத்து, வீரா, எஜமான் ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக குசேலன் படம்
ரஜினி - மீனா ஜோடி ஹிட் ஜோடி என்பதால் அந்த ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். கடைசியாக 2008ஆம் ஆண்டு ரஜினி நடித்த குசேலன் படத்தில் நடிகர் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார் மீனா. இதனை தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











