21 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் இணையும் நடிகை மீனா.. யார் கூடன்னு பாருங்க!
சென்னை: நடிகை மீனா 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை மீனா.

ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை மீனா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் தெலுங்கு த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் மீனா.
அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். மீனாவும், பாலகிருஷ்ணாவும் கடைசியாக 1999-ம் ஆண்டு வெளியான கிருஷ்ண பாபு என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
Recommended Video
சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை கோபிசந்த் மிலினேனி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











