Meena: கட்டியணைத்து முத்தம் கொடுத்த மீனா.. பிரபல டிவி ஷோவில் சுவாரஸ்யம்!
சென்னை: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்கத் துவங்கி, தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர்.
நாயகியாகவும் ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா, ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

திருமணமாகி குழந்தை பிறந்த பின்பும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போதும் ரஜினி, மோகன்லால் என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் பங்கேற்ற மீனா: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா ஒரு கட்டத்தில் நாயகியாகவும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்தார். என் ராசாவின் மனதிலே என்ற படம் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து நடித்திருந்தார் மீனா.
தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டார். தென்னிந்திய அளவில் மோகன்லால் உள்ளிட்டவர்களுடனும் இவர் ஜோடியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக இவரது கணவர் மரணமடைந்தார்.
திருமணமாகி, குழந்தை பிறந்த நிலையிலும் தொடர்ந்து ரஜினி, மோகன்லால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த மீனாவிற்கு, அவரது கணவரின் மறைவு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய நிலையில், தென்னிந்திய அளவில் நடிகர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர். தற்போது தன்னுடைய துக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வந்துக் கொண்டிருக்கிறார் மீனா.

சமீபத்தில் திரையுலகில் இவர் 40 ஆண்டுகளை கடந்ததை விழாவாக நடத்தி கொண்டாடியது கோலிவுட். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் மீனாவை பார்க்க முடிகிறது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தற்போது பல்வேறு சுவாரஸ்யங்களுடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டூயட் ரவுண்ட் நடைபெற்றுவரும் நிலையில், நிகழ்ச்சியின் நடுவராக மீனா பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமி ஒருவர், முத்து படத்தில் மீனாவின் ஸ்பெஷல் டயலாக்கான இறுக்கி அணைத்து ஒரு உம்ம தருமோ என்று கேட்க, தன்னுடைய இருக்கையில் இருந்து இறங்கிவந்த மீனா, அந்த சிறுமியை கட்டியணைத்து முத்தும் தருகிறார். இந்த நிகழ்வு பார்வையாளர்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











