Actress Meena: பிரபல ஹீரோவுடன் காதலா? கிசுகிசு பரப்பும் முட்டாள்கள்..விளாசிய மீனா!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை மீனா, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார். இவர் குறித்து இணையத்தில் பரவி வரும் கிசு கிசு வதந்திக்கு, தனது எக்ஸ் தள பக்கத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை மீனாவிற்கு சினிமாவில் ஓர் அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினி அங்கிள் என சூப்பர்ஸ்டார் மீது அலாதி பிரியம் கொண்ட குட்டி பெண்ணாக நடித்திருந்தார் நடிகை மீனா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, என் ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோயினாக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மா என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மீனா. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

Meena gossip

நடிகை மீனா: இதன்பின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த மீனா, எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் ரஜினி கூடவே ஜோடியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு மீனா மற்றும் ரஜினி இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணமாக இருந்தது. ரஜினியிடம் மட்டுமில்லாமல் கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, பிரபுதேவா, சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

கணவர் இறந்தார்: கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். நைனிகாவும் தற்போது குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யா சாகருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவரின் இறப்பிற்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை மீனா ஒரு சில படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

முட்டாள்கள்: அண்மையில் மீனா குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. அதில் அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பிரபல டாப் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் மீனா குறித்து கிசுகிசு பரவி வருகிறது. இதுகுறித்து, தனது கோவத்தை வெளிப்படுத்தி உள்ள மீனா, வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன, முட்டாள்களால் பரப்பப்படுகிறது. மற்றும் முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகை குஷ்பு தனது ஆதரவை தெரிவிப்பது போல, More power to you woman!! Loads of love to you என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: meena gossip மீனா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X