ஏதாவது செய்துதான் ஆகணும்..கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு...வாழ்த்து கூறிய ரசிகர்கள் !
சென்னை : கணவர் மறைந்த பிறகு நடிகை மீனா, அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து அதை செயல்படுத்தியும் உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி,கமல், அஜித், விஜய், சத்யராஜ், பிரபு என பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதே போல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

மீனாவின் கணவர்
நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டார். அதன் பிறகு கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்தார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், உடல் உறுப்புக்காக காத்திருந்தனர்.

கணவர் உயிரிழந்தார்
6 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வித்யா சாகர் பல மாதங்களாக மாற்று உறுப்புக்காக காத்திருந்த நிலையில், இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். கணவரின் இறுதி சடங்குகளை மீனாவே செய்தார். கணவரின் மறைவுக்கு பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரின் தோழிகளான சங்கவி, சங்கீதா, ரம்பா, குஷ்பு, ராதிகா என பலரும் வீடு தேடி வந்து ஆறுதல் கூறி அவரை வெளியில் அழைத்து வந்தனர்.

மீண்டு வந்த மீனா
இந்நிலையில், நடிகை மீனா விளம்பர படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், கவலைகளை மறந்து மீண்டும் நடிக்க வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மீண்டும் திரையில் உங்களை காண்பது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
சமீபத்தில் மீனா, தனது மகளுக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் செய்தி பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா, மறுமணம் குறித்து பரவும் செய்தியை கேட்டு நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இப்போது என் கவனம் முழுவதும் என் மகளின் வாழக்கையிலும், நடிப்பின் மீது மட்டுமே உள்ளது. இது போன்று ஆதாரம் இல்லாமல் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











