twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தைக் காப்பாத்துற அற்புதமான வாய்ப்பு.. நடிகை மீனா சொல்றதை கேளுங்க!

    By
    |

    சென்னை: கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியில் சுற்றுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Government சொன்ன கேக்கமாடிங்களா? | Quarantine | Lock Down

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இப்போது மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    இந்தியாவிலும் இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

     பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா? விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்! பார்ட்டியில் கலந்து கொண்டு, போதையில் வேகமாக கார் ஓட்டினேனா? விபத்தில் சிக்கிய பிரபல நடிகை ஆவேசம்!

    ஷூட்டிங் ரத்து

    ஷூட்டிங் ரத்து

    இதைத் தடுக்க அனைத்து நாடுகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலாளர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    இந்நிலையில், பிரதமர் மோடி மக்களிடையே பேசும்போது ஏப்ரல் 5 ஆம் தேதி (இன்று) இரவு ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது டார்ச்லைட் மூலம் ஒளி ஏற்றி, கொரோனாவுக்கு எதிரான செயல்பாட்டில் மக்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை பலர் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

    நடிகை மீனா வீடியோ

    இந்நிலையில், நடிகர், நடிகைகள் தொடர்ந்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இருந்தாலும் பொதுமக்கள் கடைகளில், பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்கவில்லை. கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வருத்தமா இருக்கு

    வருத்தமா இருக்கு

    அவர் வெளியிட்டுள்ளா வீடியோவில், கோவிட் 19 கொரோனா வைரஸ், இந்த உலகையே ஆட்டிப் படைச்சுட்டு இருக்கு. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா லாக்டவுன் பண்ணினாலும் நிறைய பேர் இதை சீரியசா எடுத்துக்காம, விளையாட்டா வெளிய சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு கேள்விபடும்போது, டிவியில பார்க்கும்போது ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு.

    தினம் தினம்

    தினம் தினம்

    இந்த மாதிரி, அரசு சொல்றதை கேட்காமத்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள்ல நிலைமை ரொம்ப மோசமா போயிருக்கு. தினமும் ஆயிரக்கணக்கானவங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுத்து. நூற்றுக்கணக்கானவங்கத் தினம் தினம் செத்துப் போறாங்க. அமெரிக்காவுல 2.5 லட்சத்துக்கு மேலானவங்களுக்கு கோவிட் 19 வைரஸ் அட்டாக் ஆகிருக்கு.

    வீட்டு வேலை

    வீட்டு வேலை

    இந்த நிலைமை நமக்கு வேணுமா? இது வராம இருக்கறதுக்கு நாம, அரசு சொல்றதை கேட்கணும். எவ்வளவு நேரம்தான் வீட்டுலயே டிவி பார்க்கிறது, போரடிக்குதுன்னு சொல்லாதீங்க. வீட்டுல குழந்தைங்க இருந்தாங்கன்னா, அவங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுங்க, அவங்களோட விளையாடுங்க. வீட்டு வேலை பாருங்க, கிச்சன்ல ஹெல்ப் பண்ணுங்க.

    அற்புதமான வாய்ப்பு

    அற்புதமான வாய்ப்பு

    யோகா, மெடிடேசன் இப்படி நிறைய இருக்கு. வீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தையே காப்பாத்துற ஓர் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. ஜோக்கை விட்டுட்டு சீரியசா சொல்றேன். நீங்க ஜாக்கிரதையா இருந்தாதான், உங்க குடும்பம் ஜாக்கிரதையா, பாதுகாப்பா, ஆரோக்கியமா இருக்க முடியும். அதனால பொறுப்போட இருங்க. வீட்டுலயே இருங்க' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Meena request citizens to follow discipline and social distancing and stay safe at home
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X