அஜித்தை மேடையில் அவமானப்படுத்திய நடிகையின் அம்மா.. யார் தெரியுமா?

சென்னை: திரையுலகில் இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்தை மேடையிலேயே வைத்து நடிகையின் அம்மா அவமானப்படுத்திய சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது இந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.

பின்னணி இல்லாமல் முன்னணிக்கு வந்த அஜித்

பின்னணி இல்லாமல் முன்னணிக்கு வந்த அஜித்

சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து இந்த திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னனி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாகம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் மிகவும் அடிபட்ட அஜித் தான் பட்ட அடிகளை படிகளாக மாற்றிக்கொண்டு முன்னேறியவர்.

ஆசை நாயகன் அஜித்

ஆசை நாயகன் அஜித்

திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார். தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற ஹிட்டடிக்க தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் அஜித்.

அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித்குமார்

அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித்குமார்

தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய இந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி முகத்தை பார்த்தார்.

எவ்வளவு வந்தாலும் விடாத தல அஜித்

எவ்வளவு வந்தாலும் விடாத தல அஜித்


தோல்வி படங்கள் ஒரு பக்கம், விபத்து மறுபக்கம் என அஜித்தின் கேரியர் ஊசலாடிய சமயத்தில்தான் வந்தது தீனா. ஏ.ஆர். முருகதாஸின் முதல் படமான தீனாவில் அஜித் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார். அந்தப் படத்திலிருந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தல ஆனார். அதன் பிறகும் அஜித்திற்கு சில தோல்வி படங்கள் அமைந்தன. இருப்பினும் பில்லா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

ஏகே அஜித்குமார்

ஏகே அஜித்குமார்

பில்லா படத்திற்கு பிறகு அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது. அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் அ.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துண்வு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலத்தில் அஜித் சந்தித்த அவமானம்

ஆரம்பகாலத்தில் அஜித் சந்தித்த அவமானம்

இப்படி தோல்வியில் விழுந்து கற்று எழுந்து நடைபோட்டு வரும் அஜித்தை நடிகை மீனாவின் அம்மா ஒரு மேடையில் அவமானப்படுத்திய சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவமானது அஜித்தும் மீனாவும் நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தின் சமயத்தில் நடந்திருக்கிறது.

அப்போது நடந்தது என்ன?

அப்போது நடந்தது என்ன?

ராஜ்கபூர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான படம் ஆனந்த பூங்காற்றே. இந்தப் படத்தில் கார்த்திக் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அஜித்திற்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித் வளர்ந்துவரும் நடிகர். மீனா டாப் நடிகை.

படம் வெளியான பிறகு பிரபல பத்திரிகை ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை அஜித்திற்கும், சிறந்த நடிகைக்கான விருதை மீனாவுக்கும் கொடுத்திருக்கிறது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வ்ழங்கிய தொகுப்பாளினி, அஜித்தும், மீனாவும் இணைந்து மேடையில் நடனம் ஆட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்.

மீனாவும் சம்மதித்து ஆட ஆரம்பிக்கும்போது, கீழே இருந்த மீனாவின் அம்மா உடனடியாக மேடையேறி, "எனது மகள் ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களோடு நடித்துவருபவர். இவர் நேற்று வந்த ஒரு நடிகருடன் நடனம் ஆடமாட்டார்" என தடுத்துவிட்டாராம். தற்போது இந்த சம்பவம் பத்திரிகையாளர் ஒருவர் மூலம் தெரியவந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X