ஏடாகூடமாக கேள்விக்கேட்ட ரசிகர்.. அழகாய் சமாளித்த நடிகை மீனா!

சென்னை : நடிகை மீனா சிறுவயதில் இருந்தே நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

Recommended Video

Meena | Friendship Day-ல் ஆதரவளித்த தோழிகள் ! உற்சாகத்தில் ரசிகர்கள் *Kollywood

முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

ஏராளமான ரசிகர்களை தன்னுடைய இயல்பான நடிப்பின்மூலம் கவர்ந்தவர் மீனா. இவருடைய மகள் நைனிகாவும் தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்புப் பயணத்தை துவங்கியவர். இவரது நடிப்பில் அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக உள்ளன. சிவாஜி உள்ளிட்டவர்களுடனும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

முன்னணி நாயகர்களுடன் ஜோடி

முன்னணி நாயகர்களுடன் ஜோடி

தொடர்ந்து நாயகியாகவும் களமிறங்கிய மீனா, கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்தப் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தார் மீனா.

மீனாவின் திருமணம்

மீனாவின் திருமணம்

ஒரு கட்டத்தில் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினீயரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யுடன் தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெறி பேபி என்று இவர் பேசிய குழந்தைத்தனமான வசனங்கள் விஜய் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தன.

மீனாவின் வாழ்க்கையில் இடி

மீனாவின் வாழ்க்கையில் இடி

இதனிடையே சிறப்பாக சென்றுக் கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் சமீபத்தில் பெரும்புயல் ஒன்று அடித்து அவரது கணவர் வித்யாசாகரை அடித்து சென்றது. மல்டி ஆர்கன் பெயிலியர் காரணமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 3 மாதங்களுக்கு மேல் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் போனது.

கைக்கொடுத்த திரையுலகம்

கைக்கொடுத்த திரையுலகம்

தன்னந்தனியாக, தன்னுடைய கணவரின் இறுதிச்சடங்குகளை தானே முன்னின்று மீனா நடத்தினார். தன்னுடைய கணவரின் அஸ்தியை அவர் கையில் கொண்டுவந்தபோது அதைப் பார்த்து கலங்காத கண்களே இல்லை என்று கூறலாம். ஆனால் இந்த சமயத்தின் ஒரே ஆறுதல், மீனாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமே கைக்கொடுத்து ஆறுதலாக நின்றதுதான்.

முடங்கிய மீனா

முடங்கிய மீனா

ரஜினி, குஷ்பூ, கலா மாஸ்டர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் அளித்தனர். இதையடுத்து சில மாதங்கள் தன்னுடைய வீட்டிலேயே முடங்கிய மீனா, தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த இடியிலிருந்து வெளியில் வர முயற்சித்து வருகிறார். தொடர்ந்து இவரை இன்ஸ்டாகிராம் பதிவுகளில் காண முடிகிறது.

வைரலான பழைய வீடியோ

வைரலான பழைய வீடியோ

இதனிடையே தற்போது சமூக வலைதளங்களில் மீனா, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த கேள்வி பதில் செஷனில், ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட பல கேள்விகளுக்கு மீனா பொறுமையாக பதிலளிக்கிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்வீர்களா என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக தன்னுடைய திருமண புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கொஞ்சம் லேட் என்று பதிலளித்துள்ளார்.

மீனாவை திருமணம் செய்ய ஆசை

மீனாவை திருமணம் செய்ய ஆசை

மேலும் மற்றொரு ரசிகரோ, 20 ஆண்டுகளுக்கு முன்னால் சென்று மீண்டும் பிறந்துவந்து மீனாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதற்கு மீனா, ஆவ் என்று பதிலளிக்கிறார். இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களின் பல்வேறு சுவாரஸ்மான கேள்விகளுக்கு அந்த வீடியோவில் பதிலளிக்கிறார் மீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X