‘’பாபநாசம் 2“வில் நடிப்பீங்களா? கமலிடம் கேளுங்கள்… நடிகை மீனா பதில் !
சென்னை : மோகன் லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Recommended Video
த்ரிஷ்யம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வசூலை அள்ளியது.
த்ரிஷ்யம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2ம் பாகம் உருவானது. இரண்டாம் பாகத்திலும் மோகன் லால், மீனா, அன்சிபா, எஸ்தர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மிகப்பெரிய வெற்றி
த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் கௌதமியின் நடிப்பு குறித்து சில நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கமலின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், பாபநாசம் 2 விரைவில் உருவாக உள்ளது. இதில் கமல்ஹாசன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி , இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும், அவர் நடித்த கதாபாத்திரத்தில் மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கமலிடம் கேளுங்கள்
இதுகுறித்துதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை மீனாவிடம் ரசிகர் ஒருவர் பாபநாசம் 2வில் கமலுக்கு ஜோடியாக நீங்க நடிப்பீங்களா என்ற கேள்விக்கு, இந்த கேள்வியை கமலிடம் கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்
திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுக்கி இருந்த மீனா, த்ரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர், அண்ணாத்த, த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











