மீண்டும் ஃபார்மிற்கு திரும்பிய மீனா.. என்னா கெத்தா வீடியோ வெளியிட்டிருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகை மீனா தன்னுடைய சிறுவயதில் இருந்து நடித்து வருகிறார். ரஜினி, சிவாஜி உள்ளிட்டவர்களுடன் இவர் நடித்துள்ளார்.
தொடர்ந்து நாயகியாகவும் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்திலும் இவர் நடித்துள்ளார்.

நடிகை மீனா
நடிகை மீனா சிறு வயதில் இருந்தே சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் பல முன்னணி கதாநாயர்களுடன் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நாயகியாக மீனா
தொடர்ந்து நாயகியாகவும் பட்டையை கிளப்பியுள்ளார் மீனா. தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் என்ட்ரி கொடுத்த மீனா, அந்தப் படத்தில் சிறிது நேரத்திலேயே இறந்து, ரசிகர்களின் பரிதாபங்களை அள்ளினார். தொடர்ந்து ரஜினியுடன் எஜமான் படத்திலும் இவர் வைத்தீஸ்வரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

வைத்தீஸ்வரி கேரக்டர்
எஜமான் படத்திலும் சிறிது நேரத்திலே இறக்கும் கேரக்டரில்தான் மீனா நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தில் வானவராயன் -வைத்தீஸ்வரி கேரக்டர்களின் கெமிஸ்ட்ரி அந்த காலத்தில் மிகவும் சிறப்பாக பார்க்கப்பட்டது. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதி கேரக்டரில் இருவரும் வாழ்ந்திருப்பார்கள்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என தமிழில் இவர் ஜோடி சேராதவர்களே இல்லை என்று கூறும் வகையில் இவர் காணப்பட்டார். இதேபோலதான் மற்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டிலானாலும் தன்னுடைய நடிப்பை இவர் விட்டுவிடவில்லை.

கணவர் உயிரிழப்பு
இந்நிலையில் அவரது கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உயிரிந்தார். அவர் சினிமாவை விடாமல் தொடர்ந்ததுதான் தற்போது அவருக்கு கைக்கொடுக்கவுள்ளது. தொடர்ந்து அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் மீனா நடித்துவந்த நிலையில், அவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

முடங்கிய மீனா
தன்னுடைய கணவரின் இறப்பு இடிபோல மீனாவை தாக்கிய நிலையில், அவரது சக தோழிகள் அவருக்கு ஆறுதலாக இருந்தனர். சமீபத்தில் மீனாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தொடர்ந்து ட்ரீட் கொடுத்தனர். சிறப்பாக என்டர்டெயின் செய்தனர். இந்நிலையில் மீனா, தற்போது தனது துயரத்தில் இருந்து பெருமளவில் மீண்டுள்ளார்.

புதிய வீடியோ
இன்றைய தினம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பான கெட்டப்புடன் கேட்வாக் நடக்கும்படியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சாதாரணமாக உள்ளே போகும் அவர் கெத்தான உடையுடன் வெளியில் வருவது போல இந்த வீடியோ காணப்படுகிறது. ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











