மீண்டும் அந்த குழந்தை சிரிப்பு..சோகத்திலிருந்து மீண்ட மீனா.. ஃபிரண்ட்ஷிப் டேயில் ஆதரவளித்த தோழிகள்

சென்னை : நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய வாழ்க்கையை சினிமாவில் துவக்கியவர். தொடர்ந்து நாயகியாக, தற்போது கேரக்டர் ரோல்களில் கலக்கி வருகிறார்.

சிறப்பான வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து வந்தவர், அதற்காக தொடர்ந்து தனது கணவர் வித்யாசாகருக்கு நன்றி தெரிவித்து வந்தவர் மீனா.

ஆனால் இதற்கெல்லாம் எண்ட் கார்ட் போட்டுவிட்டது வாழ்க்கை. சமீபத்தில் மல்டி ஆர்கன் பெயிலியர் காரணமாக உயிரிழந்துள்ளார் வித்யா சாகர்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர். அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அந்த வயதிலேயே அழகான சிரிப்புக்கு சொந்தக்காரராக இருந்தவர். முத்துமணிச் சுடரே வா என்று இந்தப் படத்தில் ரஜினி பாடல் பாடுவார்.

முத்து மணிச்சுடர் மீனா

முத்து மணிச்சுடர் மீனா

அதற்கேற்ப முத்து மணிச்சுடராகவே ஜொலித்தவர் மீனா. தொடர்ந்து நாயகியாகவும் சிறப்பான என்ட்ரியை கொடுத்தார். என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்த மீனா, தன்னுடைய அப்பாவித்தனமான பார்வையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

முகம் காட்டிய நிலவு

முகம் காட்டிய நிலவு

தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்தில் நடித்து சிறிது நேரத்திலேயே தற்கொலை செய்துக் கொள்வதாக கதை நகரும். இந்தப் படத்தில் நிலவே முகம் காட்டு என்று ரஜினி பாடும்போது நிலவாகவே நமக்கெல்லாம் தெரிந்தார் மீனா. தொடர்ந்து ரஜினியுடனே முத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர், பல ஹீரோக்களுடன் ஜோடிப் போட்டு சிறப்பாக நடித்து வந்தார்.

அழகான வாழ்க்கை

அழகான வாழ்க்கை

ஒரு காலகட்டத்தில் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ள நிலையில், வாழ்க்கை மிகவும் அழகானதாக மாறியது மீனாவுக்கு. கடந்த ஆண்டு தங்களது திருமண நாளில், தன்னுடைய கணவன், தன்னுடைய வாழ்க்கையின் சொத்து என்று பதிவிட்டிருந்தார்.

கணவரின் திடீர் மரணம், முடங்கிப்போன மீனா

கணவரின் திடீர் மரணம், முடங்கிப்போன மீனா

இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மாற்று நுரையீரல் பொருத்தினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலையில் சிகிச்சை பெற்றுவந்த வித்யாசாகர் 3 மாதங்கள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாற்று நுரையீரல் கிடைக்காத நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இல்லம் திரும்புவார் கணவன் என மீனா எதிர்பார்த்த நிலையில் வீட்டிற்கு வராமல் மருத்துவமனையிலேயே வித்தியாசாகர் உயிர் பிரிந்தது. கணவரின் மரணம் மீனாவை முடக்கி போட்டது. 8 வயது மகளுடன் தனி மரமானார் மீனா.

மீனாவை புரட்டிப்போட்ட இழப்பு

மீனாவை புரட்டிப்போட்ட இழப்பு

இந்த திடீர் இழப்பு மீனாவை புரட்டிப் போட்டது. ஆண் குழந்தை இல்லாத நிலையில் வித்யாசாகரின் இறுதிச் சடங்குகளையும் அவரே செய்தது காண்பவர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மீனாவின் கதறல் நேரில் சென்று ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களையும் கண்ணீர் விடச் செய்தது.

மீண்டு வரும் மீனா

மீண்டு வரும் மீனா

இந்நிலையில் தன்னுடைய இழப்பின் வலியிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு வருகிறார் மீனா. தன்னுடைய கணவன் குறித்த பதிவை இரு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், தொடர்ந்து பிரண்ட்ஷிப் குறித்த பதிவையும் வெளியிட்டார். இதனால் அவரது ரசிகர்கள், மீனாவிற்கு பக்கபலமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

சக ஹீரோயின்கள் சந்திப்பு

சக ஹீரோயின்கள் சந்திப்பு

இந்நிலையில் மீனாவின் சக ஹீரோயின்கள் மற்றும் தோழிகள் ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா தங்களின் குடும்பத்தினருடன் மீனா வீட்டிற்கு சென்று அவர்களுடன் சிறப்பான வகையில் நேரத்தை செலவிட்டுள்ளனர். இந்த சந்திப்பின்போது அவர்கள் அனைவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

மீண்டும் சிரிப்பு

மீண்டும் சிரிப்பு

அழகான சிரிப்புக்கு சொந்தக்காரரான மீனா, கடந்த சில வாரங்களில் தன்னுடைய சிரிப்பை மறந்திருந்த நிலையில், இந்தப் புகைப்படங்களில் அவரது ஆர்ப்பாட்டமில்லாத சிரிப்பை பார்க்க முடிந்தது. தன்னுடைய மகள் நைனிகாவையும் அணைத்தபடி அவர் இந்தப் புகைப்படங்களில் போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்தப் புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X