13வது திருமண நாள்.. கணவர் இறந்த சில தினங்களில் வந்த நிகழ்வு.. கண்கலங்கி நிற்கும் மீனா!
சென்னை : நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இன்றைய தினம் மீனா -மற்றும் வித்யாசாகரின் திருமண நாள். கடந்த 2009ல் இதே நாளில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
சிறிய வயதிலேயே வித்யாசாகர் மரணமடைந்தது மீனா குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நடிகை மீனா
நடிகை மீனா சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறார். ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்திருந்த இவர், தொடர்ந்து அவருடனேயே எஜமான், முத்து போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். கமல், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மகள் நைனிகா
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி இவர் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினீயரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய், அரவிந்த் சாமி உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யுடன் நைனிகா நடித்திருந்த தெறி படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

நுரையீரல் பாதிப்பு
இந்தப் படம் இவருக்கு அறிமுகப் படமாக இருந்தாலும் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக காணப்பட்டது. பல காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவை இவர் நியாபகப்படுத்தினார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சினையால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார்.

உயிரிழந்த வித்யாசாகர்
இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மாதம் 28ம் தேதி இவர் உயிரிழந்தார். இந்த இழப்பு மீனா மற்றும் நைனிகாவை புரட்டிப் போட்டுள்ளது. தனக்கு ஆண் குழந்தை இல்லாத நிலையில், கணவரின் இறுதிச் சடங்குகளை தானே முன்னின்று நடத்தினார் மீனா. கணவரின் அஸ்தியுடன் அவர் நடந்து வந்தது அனைவரையும் கண்கலங்க செய்தது.

கணவர் இல்லாத முதல் திருமண நாள்
வித்யாசாகர் இறந்து சில தினங்களே ஆன நிலையில் இன்றைய தினம் தனது கணவர் இல்லாத முதல் திருமண நாளை எதிர்கொண்டுள்ளார் மீனா. கடந்த ஆண்டில் இதே நாளில் தனது கணவர் தன்னுடைய வாழ்க்கையில் வானவில் போன்றவர் என்று மீனா, இருவரின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
Recommended Video

ரசிகர்கள் ஆறுதல்
இந்நிலையில் இன்றைய தினம் வித்யாசாகர் இல்லாத கொடுமையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் மீனாவிற்கு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மகள் நைனிகாவை மனதில் வைத்து அவர் தன்னை தேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











