சோகத்திலிருந்து மீண்டு வந்த நடிகை மீனா.. சுதந்திர தினத்திற்கு வாழ்த்து.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகை மீனா குழந்தை நட்சத்திரத்திலிருந்து ரஜினி உள்ளிட்டவர்களுடன் நடித்து பிரபலமானவர்.

நாயகியாகவும் ரஜினி, கமல் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது அண்ணி, அக்கா உள்ளிட்ட கேரக்டர் ரோல்களில் இவரை காண முடிகிறது. சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியின் மாமன் மகளாக நடித்திருந்தார்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடித்தவர். இவரது அழகான சிரிப்புக்காகவே ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர். ரஜினி, சிவாஜி என நடித்தார். ரஜினியுடன் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம்.

அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

மனநலச் சிக்கலில் உடல்நலக்குறைவில் இன்னும் சிறிது காலங்களில் இறக்கப்போகும் குழந்தை மீனாவிற்கு புது உலகத்தை காட்டுவார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படத்திலும் அவர் நடிகராகவே நடித்திருந்தார். ரஜினி அங்கிள் என்று இந்தப் படத்தில் மீனா நடித்திருந்த கேரக்டர் மிகவும் அதிகமாக ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

என் ராசாவின் மனசிலே படம்

என் ராசாவின் மனசிலே படம்

இதையடுத்து ஹீரோயினாகவும் மீண்டும் களமிறங்கி பட்டையை கிளப்பினார் மீனா. தமிழில் இவரது அறிமுகப்படமான என் ராசாவின் மனசிலே இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. சிறிது நேரமே இந்தப் படத்தில் வந்தாலும் தற்போது வரை இந்தக் கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பு அளவில் அடங்காதது.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

முன்னணி நடிகர்களுடன் ஜோடி

தொடர்ந்து இந்தப் படம் கொடுத்த வரவேற்பில் மீனாவிற்கு தமிழிலேயே அதிகமான படங்கள் குவிந்தன. ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இந்தப் படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன. நாட்டாமை, முத்து என இவரது படங்களின் வெற்றி நீண்டது.

வித்யாசாகருடன் திருமணம்

வித்யாசாகருடன் திருமணம்

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே வித்யாசாகர் என்ற ஐடி புரொபஷனலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவரும் விஜய், அரவிந்த் சாமி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

உயிரிழந்த வித்யாசாகர்

உயிரிழந்த வித்யாசாகர்

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீனாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. இவரது கணவர், மல்டி ஆர்கன் செயலிழப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், இடியே இறங்கியதுபோல உடைந்துப் போனார் மீனா. சிறிய குழந்தையை வைத்துக் கொண்டு கண்கலங்கி கதறினார்.

கடந்து போகும் வாழ்க்கை

கடந்து போகும் வாழ்க்கை

காலம் எந்த ஒரு காயத்தையும் மாற்றும் என்பதும் கடந்துப் போவதுதான் வாழ்க்கை என்பதும் மீனாவின் வாழ்க்கையில் உண்மையாகியுள்ளது. தொடர்ந்து சில வாரங்கள் வீட்டிலேயே முடங்கிய மீனா, தற்போது சமூக வலைதளங்கள் மூலம் சில பதிவுகளை இட்டு வருகிறார். சமீபத்தில் சங்கவி உள்ளிட்ட சினிமா தோழிகள் இவரை சந்தித்த நிகழ்வையும் இவர் பதிவிட்டிருந்தார்.

சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தின வாழ்த்து

இந்நிலையில் இன்றைய தினம் நாட்டில் 76வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான வந்தே மாதரம் பாடலுடன் தேசியக் கொடியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பறக்க விட்டுள்ளார்.

Recommended Video

Meena | என் அன்பான கணவரை இழந்து வாடுகிறேன்... *Kollywood | Filmibeat Tamil
மீனாவின் மனமாற்றம்

மீனாவின் மனமாற்றம்

மீனாவின் இந்த மனமாற்றம் அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகிறது. காலம் கண்டிப்பாக அவரது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை விரைவில் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் காணப்படுகின்றனர். அவர் சூட்டிங்கில் இணையும் நாளுக்காகவும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X