என்னது அதுக்குள்ள 44 வருஷம் ஆயிடுச்சா.. ராதிகாவை வாழ்த்திய மீனா.. எதுக்குன்னு தெரியுமா!

சென்னை : நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில்தான் முதன்முறையாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக சுதாகரை காதலிக்கும் இளம்பெண் கேரக்டரில் நடித்திருந்தார்.

கடந்த 1978ல் வெளியான இந்தப் படம் அவருக்கு மிகச்சிறந்தப் பாராட்டுக்களையும் தொடர்ந்து படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

நடிகை ராதிகா சரத்குமார்

நடிகை ராதிகா சரத்குமார்

நடிகை ராதிகா சரத்குமார், எம்ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற என அவர் மிகுந்த மெனக்கெட வேண்டியிருந்தது. பல போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

கிழக்கே போகும் ரயில் படம்

கிழக்கே போகும் ரயில் படம்

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தில் பாஞ்சாலியாக இளம் கிராமத்து பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் ராதிகா. இந்தப் படத்தில் நடிக்கும்போது அவருக்கு தமிழ்கூட அதிகமாக தெரியாது. அந்தவகையில் இந்தப் படத்தின் பாஞ்சாலி கேரக்டரை உள்வாங்கிக்கொண்டு அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராதிகா. இவரது நடிப்பில் வெளியான கிழக்குச் சீமையிலே, கேளடி கண்மணி உள்ளிட்ட படங்கள் இவரது கேரியரில் பெஸ்டாக அமைந்தன. போல்டான கேரக்டர்களில் இவர் மிகச் சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

இதுமட்டுமில்லாமல், தன்னுடைய ராடன் மீடியா தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார். சித்தி, அண்ணாமலை, அரசி, செல்வி என ஏராளமான சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பியுள்ளார். இந்தத் தொடர்களில் பிரதான கேரக்டர்களில் இவர் நடித்தும் உள்ளார்.

சிறப்பான சீரியல்கள்

சிறப்பான சீரியல்கள்

குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான சித்தி, சித்தி 2 போன்ற சீரியல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல்கள். தற்போது கலைஞர் டிவியின் பொன்னி c/o ராணி என்ற தொடரை வெளியிட்டு வருகிறார். இந்தத் தொடரும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

44 ஆண்டுகள் திரைப்பயணம்

44 ஆண்டுகள் திரைப்பயணம்

இந்நிலையில், இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்து தற்போது 44 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இன்றைய தினம் ராதிகா தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடி வருகிறார்.

ராதிகா பிறந்தநாள்

ராதிகா பிறந்தநாள்

ராதிகாவின் பிறந்தநாளையொட்டி நடிகை மீனா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராதிகாவின் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகில் கால்பதித்து 44 ஆண்டுகள் கடந்தது இரண்டையும் குறிப்பிட்டு மீனா வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்பட தொகுப்பு

புகைப்பட தொகுப்பு

இதையொட்டி ராதிகாவின் அழகான புகைப்படங்களின் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் ராதிகாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர அவர் மறக்கவில்லை. இதை தொடர்ந்து மீனாவின் இந்த வாழ்த்திற்கு ராதிகாவும் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X