Thalapathy68: தளபதி 68 படத்தில் இணைந்த மீனாட்சி சவுத்ரி.. அப்ப பிரியங்கா மோகன்?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகியுள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணையவுள்ளார் விஜய்.

இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சூட்டிங்கிற்கு முன்னதாகவே இந்தப் படம் ஏராளமான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தளபதி68 படத்தில் இணையும் மீனாட்சி சவுத்ரி?: நடிகர் விஜய்யின் லியோ படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சென்சாரும் நடக்கவுள்ளது. விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணி, லியோ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. லியோ படம் 100 சதவிகிதம் தன்னுடைய ஸ்டைலில் இருக்கும் என்று முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியிருந்த நிலையில், விஜய்யை அவர் எப்படி காட்டியிருப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சூட்டிங் வரும் 3ம் தேதி சென்னையிலேயே துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் சூட்டிங் பாடல் காட்சிகளுடன் துவங்கவுள்ளதாகவும் இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் நடனம் அமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்பா -மகன் கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் ஜோடி சேரவுள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பிரபல தெலுங்குப்பட நாயகி மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இவர் முன்னதாக தமிழில் கொலை படத்திலும் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக குண்டூர் காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதா கூறப்பட்டுள்ளது. இவர் பிரியங்கா சவுத்ரிக்கு மாற்றாக இணைந்துள்ளாரா அல்லது, படத்தில் இவரும் ஒரு நாயகியா என்பது குறித்து விரைவில் படக்குழு சார்பில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











