அழகெல்லாம் தேவையில்லை.. அது மட்டும் இருந்தா போதும் ஜெயிச்சிடலாம்.. சூட்சுமம் சொன்ன மீனாட்சி சௌத்ரி!

சென்னை: நடிகை மீனாட்சி சௌத்ரி விஜய், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கோட் படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. இந்த கேரக்டருக்கு மிகவும் குறைவான காட்சிகளே படத்தில் இருந்த நிலையில் அதிகமான வரவேற்பை அவர் பெறவில்லை.

படம் சிறப்பான வசூலை பெற்ற நிலையிலும் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. மீனாட்சி சௌத்ரியின் கேரக்டர் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி வெளியான லக்கி பாஸ்கர் படம் மீனாட்சி சௌத்ரிக்கு மிக சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் மீனாட்சி சௌத்ரி.

meenakshi chaudhary goat movie lucky bhaskar movie

நடிகை மீனாட்சி சௌத்ரி: நடிகை மீனாட்சி சௌத்ரி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி நடித்து கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே மீனாட்சி சௌத்ரிக்கு லக்காகவே அமைந்தன. ஆனால் கோட் படத்தில் இவரது கேரக்டர் விமர்சனங்களுக்கு உள்ளானது. மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் உண்மையான காதல் என்று நம்பி இடையிலேயே உயிரிழக்கும் கேரக்டர் இவருக்கு. இடையில் பாடல் காட்சியிலும் தோன்றினார். ஆனாலும் இந்த கேரக்டர் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை.

கோட் குறித்து வருத்தம்: இந்நிலையில் இந்த கேரக்டர் குறித்து மீனாட்சி சௌத்ரி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார். படத்தில் இந்த கேரக்டர் தனக்கு மிகுந்த மனஉளைச்சல் கொடுத்ததாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசான லக்கி பாஸ்கர் மிகப்பெரிய வரவேற்பை மீனாட்சி சௌத்ரிக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்த போதிலும் இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வெற்றிக்கான சூட்சமம்: இதனிடையே மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள பேட்டியொன்றில் வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். வெற்றியை பெறுவதற்கு ஒழுக்கம் இருந்தால் போதும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு நம்மை உச்சத்தில் கொண்டு நிறுத்தி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாரும் நம்முடைய வெற்றியை தடுத்துவிட முடியாது என்றும் கூறியுள்ளார். அழகு, திறமை அதிகமாக உள்ளவர்களும் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு வெற்றி சாத்தியப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

சாய் அபயங்கருடன் மீனாட்சி சௌத்ரி: அத்தகைய நபர்களுடன் எளிதாக போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றும் மீனாட்சி சௌத்ரி தெரிவித்துள்ளார். தற்போது சாய் அபயங்கர் இசையமைத்துள்ள சித்திர புத்திரி பாடலிலும் அவருடன் இணைந்து ஆடியுள்ளார். இந்தப் பாடலில் புதையலை தேடிப் போகும் சாய் அபயங்கருக்கு புதையலாக மீனாட்சி சௌத்ரி கிடைப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இளவரசியாக, மிகவும் அழகாக இந்த வீடியோ பாடலில் காணப்படுகிறார் மீனாட்சி சௌத்ரி. வெளியாகி ஒரு தினத்திலேயே 3 மில்லியன் வியூஸ்களை இந்த பாடல் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X