“கோப்ரா“ விக்ரமின் பல கெட்டப்பை பார்த்து மிரண்டு போனேன்… நடிகை மீனாட்சி !
சென்னை : கென்னடி கிளப் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான மீனாட்சி, விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் குறித்து பலதகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட மீனாட்சி, விக்ரமின் பல கெட்டப்பை பார்த்து நான் அப்படியே மிரண்டு போனேன் என்றார்.
கோப்ரா படத்தில் பணிபுரிந்தது எனக்கு 10 படங்களில் நடித்த அனுபவத்தை அளித்துள்ளது என்றார்.

கோப்ரா
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
கே.ஜி.எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி தாறுமாறு வைரலானது இப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்புகளில் நடிக்கிறார்.

மீனாட்சி
சுசீந்திரன் இயக்கிய 'கென்னடி கிளப்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான மீனாட்சி, சியான் விக்ரம் நடித்துவரும் 'கோப்ரா' படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் 45 நாட்கள் நடித்து முடித்துள்ளார். அப்படம் குறித்து பலதகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நிறைய கற்றுக்கொண்டேன்
அஜய் ஞானமுத்து அவர்களிடம் பணிபுரியும் போது நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். காட்சியில் சிறு தவறு இருந்தாலும், மீண்டும் மீண்டும் நடிக்க சொல்வார், அவரின் வெற்றிக்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். கோப்ரா படத்தில் பணிபுரிந்தது எனக்கு 10படங்களைப் போன்ற ஒரு அனுபவத்தை அளித்தது.

மிரண்டு போனேன்
'கோப்ரா'வில் விக்ரம் பல தோற்றங்களில் வருவார், எல்லா தோற்றங்களையும் நான் பார்த்து மிரண்டு போனேன். 'கோப்ரா' பார்த்த பிறகு பார்வையாளர்களும் அப்படித்தான் நினைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். கோப்ரா செட்டில் எப்போதும் மகிழ்ச்சியாகவே விக்ரம் இருப்பார் 'கோப்ரா'வில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.


Click it and Unblock the Notifications











