STR49: சிம்புவின் அதிரடி ரொமாண்டிக் படம்.. ஜோடி போட காத்திருக்கும் விஜய்பட நாயகி?
சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன், அபிராமி, திரிஷா, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிம்புவின் ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்புவின் தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்ட நடிகர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் திட்டமிடப்பட்டு வருகிறது.
சிம்புவின் அடுத்தப்படம்: தக் லைஃப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணைய உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தில் இருந்து கமல்ஹாசனின் RKFI நிறுவனம் விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தை நடிகர் சிம்புவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஸ்டிஆர்49 படம்: எஸ்டிஆர் 49 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முன்னதாக சிம்புவின் நடிப்பில் வெளியான தம், வல்லவன், மன்மதன், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் கூட்டுக் கலவையாக உருவாக உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சிம்பு நடித்திருந்த கெட்டப்பில் அவரை பார்க்க முடிந்தது.
சிம்பு ஜோடியாகும் விஜய் பட நாயகி: சிம்புவின் இந்த கெட்டப் ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக விஜய்யின் கோட், கொலை, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீனாட்சி சவுத்ரி தற்போது எஸ்டிஆர் 49 படத்தில் அவருக்கு ஜோடியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











