அதை ஏன் பயன்படுத்தக் கூடாது..? அந்த ஹீரோவால ஒரு ட்வீட் கூட போட முடியாதா..? பிரபல நடிகை ஆவேசம்!

By

சென்னை: அந்தப் பொறுப்பான ஹீரோவால் தனது ரசிகர்களை கட்டுப்படுத்த ஒரு ட்வீட் கூட போட முடியாதா? என்று பிரபல நடிகை ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

Recommended Video

Actors Beard Looks | Sarath Kumar, Vijay Devarkonda, Jr. NTR, Madhavan

நடிகை மீரா சோப்ரா, (நிலா) ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, எனக்கு மகேஷ்பாபுவைப் பிடிக்கும். ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்கவில்லை, நான் அவர் ரசிகை இல்லை என்று கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதனால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள், மீரா சோப்ராவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வக்கிரமான கருத்துக்களைப் பதிவிட ஆரம்பித்தனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாகவும் திராவகம் வீசுவோம் என்றும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். ஆபாசமாகவும் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர். இதனால், நடிகை மீரா சோப்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

எனக்குத் தெரியாது

எனக்குத் தெரியாது

இது கடந்த சில நாட்களாக, சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றியதில்லை. அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் நான் அவர் ரசிகை இல்லை என்று சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதற்காக வந்த மிரட்டல்களையும் ஆபாசமான கமென்ட்களையும் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வோம் என்றும் திராவகம் வீசுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இது தீவிரமான மிரட்டல். போலீஸ் இதில் கடுமையான நடவடிக்கை எடுத்து, முன்னுதாரணமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.

கட்டுப்படுத்த வேண்டும்

கட்டுப்படுத்த வேண்டும்

இந்த ரசிகர்கள், ஜூனியர் என்டிஆர் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி, பெண்கள் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். இதற்கு தார்மீகப் பொறுப்புள்ள நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ட்வீட் மற்றும் வீடியோ செய்தி மூலம் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும். விழிப்புணர்வுக்காகவும் இதை அவர் செய்ய வேண்டும்.

நட்சத்திர அந்தஸ்து

நட்சத்திர அந்தஸ்து

ஏராளமான ரசிகர்களிடம் பாதிப்பை செலுத்தக் கூடிய சக்தி, இந்த ஹீரோக்களிடம் இருக்கும்போது, அதை ஏன் பயன்படுத்தக் கூடாது? நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியவில்லை என்றால், நட்சத்திர அந்தஸ்தின் பயன்தான் என்ன? அவரால் ஒரு ட்வீட் போட முடியாதா? நான் முகமில்லாத ரசிகர்களை எதிர்த்து போராடப் போகிறேன்.

எத்தனை புகார்

எத்தனை புகார்

அதில் பலர் தங்கள் ஒரிஜினல் பெயரை வெளிப்படுத்த கூட தைரியம் இல்லாதவர்கள். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். நான் எத்தனை புகார் கொடுப்பது, அல்லது எத்தனை பேரைதான் போலீஸ் கைது செய்வது? அதனால்தான் அந்த ஹீரோ, ரசிகர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜூனியர் என்.டி.ஆர் அதை செய்வார் என நம்புகிறேன். இவ்வாறு மீரா சோப்ரா கூறியுள்ளார்.

மருதமலை

மருதமலை

நடிகை மீரா சோப்ரா, தமிழில் அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர். அடுத்து, ஜாம்பவான், லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X