twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்கிங் சென்ற நடிகை அப்பாவிடம் கத்திமுனையில் வழிபறி.. ஆவேசமான ஹீரோயின்.. அதிரடி காட்டிய போலீஸ்!

    By
    |

    டெல்லி: பிரபல நடிகையின் தந்தையிடம் கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்துள்ளனர்.

    நடிகை மீரா சோப்ரா, தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர்.

    அடுத்து, பிரஷாந்தின் ஜாம்பவான், சிபிராஜின் லீ, அர்ஜூனின மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

    டாப்லெஸில் தலைவிரி கோலமாய் நிற்கும் பிரபல நடிகை.. போட்டோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்! டாப்லெஸில் தலைவிரி கோலமாய் நிற்கும் பிரபல நடிகை.. போட்டோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்!

    மீண்டும் நடிக்க

    மீண்டும் நடிக்க

    தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்திப் படங்களிலும் நடித்த அவர், இடையில் சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'செக்‌ஷன் 375' என்ற படம் வெளியாகி இருந்தது.

    பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ரா

    இப்போது லாக்டவுன் காரணமாக, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர் டெல்லியை சேர்ந்தவர். இவரது, தந்தை வாக்கிங் சென்றபோது, சிலர் வந்து அவரை கத்திமுனையில் மிரட்டி சிலர் வழிப்பறி செய்ததாக, மீரா சோப்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மிரட்டி வழிப்பறி

    மிரட்டி வழிப்பறி

    'எனது அப்பா, போலீஸ் காலனியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பாக இருக்கிறது' என்று டெல்லி காவல்துறை, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு டேக் செய்து நேற்று மாலை பதிவு செய்துள்ளார்.

    உடனடி நடவடிக்கை

    உடனடி நடவடிக்கை

    இதுகுறித்து அவர் தந்தை செய்திருந்த புகாரின் எஃப்.ஐ.ஆர் எண்ணையும் பகிர்ந்துள்ளார். பின்னர் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள மீரா, 'உடனடியாக நடவடிக்கை எடுத்த வடக்கு டெல்லி காவல்துறைக்கு நன்றி. காவல்துறையால் பாதுகாக்கப்படும் போது பெருமையாக இருக்கிறது. திருடப்பட்ட பொருள் முக்கியமானது அல்ல. பெரியவர்களைப் பாதுகாப்பது முக்கியம்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Meera Chopra has tweeted that her father was robbed at knifepoint by two men in Delhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X