நீங்க கலங்கவே கூடாது.. என் படத்துல நடிக்க வாங்க.. வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்!

சென்னை: தான் தயாரிக்கும் படத்தில் தன்னுடன் நடிக்க வடிவேலுவுக்கு நடிகை மீரா மிதுன் அழைப்பு விடுத்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பழி போட்டு கமலிடம் குட்டு வாங்கினார்.

விஜய் சூர்யா வீட்டு பெண்கள்

விஜய் சூர்யா வீட்டு பெண்கள்

தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களை விமர்சித்த மீரா மிதுன், கமல் உட்பட தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக விஜய் மற்றும் சூர்யாவையும் அவர்கள் வீட்டு பெண்களையும் தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்ட்

கண்ணீர் அஞ்சலி போஸ்ட்

இதனால் கொந்தளித்த ரசிகர்கள் அவரை உண்டு இல்லை என செய்து விட்டனர். சமூக வலைதளங்களில் மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் வரை சென்றனர் ரசிகர்கள். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள மீரா மிதுன், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வடிவேலுவுக்கு வாய்ப்பு

அந்த வகையில் நடிகை மீரா மிதுன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகர் வடிவேலுவுக்காக மட்டுமே வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் அவர் பேசியிருப்பதாவது, வடிவேல் சாரோட சமீபத்திய வீடியோக்கள் மற்றும் நேர்க்காணல்களை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்று பாடி ரொம்ப ஃபீல் பண்ணியிருந்தீங்க.

வஞ்சத்தில் தான் வீழ்த்துவாங்க

வஞ்சத்தில் தான் வீழ்த்துவாங்க

எப்போவுமே ஒரு வெற்றியாளரை வஞ்சத்தில் தான் வீழ்த்துவாங்க. மோசடி செஞ்சுதான் வீழ்த்துவாங்க. ஆனா நான் உங்கக்கிட்ட ஒன்னு சொல்றேன். யாரையுமே யாரும் இக்னோர் பண்ணவே முடியாது. இது நான் என் வாழ்க்கையில கத்துக்கிட்ட பாடம்.

ஹீரோவா நடிக்கிறாங்க

ஹீரோவா நடிக்கிறாங்க

உங்களோட தெனாலி ராமன் படம் பார்த்திருக்கேன். தெனாலி ராமன் படத்தோட ரொம்ப பெரிய ஃபேன். உங்கள மாதிரி ஒரு நடிகர நான் பார்த்ததேயில்லை. ஏன்னா நிறைய பேருக்கு இங்க ஆக்ட்டிங்கோட டெஃபனேஷன தெரியாம ஹீரோவா நடிச்சுட்டு இருக்காங்க.

நீங்க பெரிய லெஜன்ட்

நீங்க பெரிய லெஜன்ட்

நீங்க தெனாலி ராமன்ல பண்ண அத்தனை ரோலுமே செமயா இருந்துச்சு. உங்களோட ஒவ்வொரு ரியாக்ஷனும் ரொம்ப நல்லாருந்துச்சு. நானே பார்த்து ஷாக்காயிட்டேன். நீங்க பெரிய லெஜன்ட். நீங்க கலங்கவே கூடாது.

என் சொந்த தயாரிப்பில்

என் சொந்த தயாரிப்பில்

நான் என்னுடைய சொந்த தயாரிப்பில் நிறைய புராஜெக்ட்ஸ் பண்ணிட்டு இருக்கேன். இந்த சின்னபொண்ணோட புரடெக்ஷன்ல நடிக்க உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னா உங்கக்கூட நடிக்கிறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

நீங்க ரொம்ப நல்லவர்

நீங்க ரொம்ப நல்லவர்

உங்கள எப்படி கான்டெக்ட் பண்றதுன்னு தெரியல. உங்க மேனேஜர் அல்லது பிஆர் என்னை கான்டெக்ட் பண்ணி பேசினா நான் மத்த டீட்டெய்ல்ஸ் சொல்லுவேன். நீங்க பெரிய லெஜன்ட், நீங்க எதுக்கும் ஃபீல் பண்ணக் கூடாது. நீங்க ரொம்ப நல்லவர், உங்களுக்கு எல்லாமே நல்லதாதான் நடக்கும். இவ்வாறு மீரா மிதுன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

10 வருடங்களா லாக்டவுன்

10 வருடங்களா லாக்டவுன்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேல், நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.

மீரா மிதுன் அழைப்பு

மீரா மிதுன் அழைப்பு

வடிவேலு கண்கலங்கிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த வீடியோக்களை பார்த்தே நடிகை மீரா மிதுன், வடிவேலுவை தனது படத்தில் தன்னுடன் நடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X