எல்லா ஆண்களும் என் மீது ஆசைப்படுவதால் தான் எனக்கு பிரச்சனை.. முதல்வரிடம் மீரா மிதுன் வீடியோ புகார்!

சென்னை: எல்லா ஆண்களும் தன் மீது ஆசைப்படுவதால் தான் தனக்கு பிரச்சனை வருகிறது என முதல்வர் ஸ்டாலினிடம் வீடியோ மூலம் புகார் கூறியுள்ளார் நடிகை மீரா மிதுன்.

நடிகை மீரா மிதுனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவுக்கு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏற்கனவே பல மோசடி புகார்கள் மற்றும் கொலை முயற்சி புகார்களுக்கு ஆளானவர் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறாக தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஆனால் குறும்படம் போட்ட கமல் மீரா மிதுன் கூறியது பச்சை பொய் என நிரூபித்தார்.

அரைகுறை ஆடையில் போட்டோ

அரைகுறை ஆடையில் போட்டோ

இதனால் விஜய் டிவி, பிக்பாஸ், கமல் ஹாசன், சக பிக்பாஸ் போட்டியாளர்கள் என அனைவரையும் விளாசினார். தொடர்ந்து தமிழ் சினிமா தன்னை புறக்கணிப்பதாக கூறிய மீரா மிதுன் பாலிவுட்டில் நடிக்க போவதாக சென்றார். ஆனால் போன வேகத்தில் திரும்பி வந்த மீரா மிதுன், சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வந்தார்.

மீரா மிதுன் மீது புகார்

மீரா மிதுன் மீது புகார்

இந்நிலையில் அண்மையில் பட்டியலின மக்கள் குறித்து தகாத முறையில் தரக்குறைவாக பேசினார் மீரா மிதுன். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மீரா மிதுன் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்

மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்

இதனிடையே மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதனிடையே மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக நேரில் ஆஜராகுமாறும் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீண்டும் ஒரு வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் வெளிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியிடம் தனது பிரச்சனை குறித்து ஆங்கிலத்தில் பேசியுள்ள மீரா மிதுன், தமிழ் சினிமா விபச்சார கூடமாக மாறிவிட்டதாகவும் தன்னை தமிழ் சினிமா துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள்

என்னைப் பற்றி தவறாக பேசுகிறார்கள்

இதேபோல் முதல்வர் ஸ்டாலினிடம் தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் அவர் பேசியிருப்பதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே... நான் நிறைய புகார் கொடுத்திருக்கேன். என்னை பற்றி கடந்த 5 ஆண்டுகளில் எவ்ளோ பேர் தவறாக பேசுகிறார்கள். எத்தனையோ பேர் யூட்யூப்பில் என்னைப் பற்றி தவறாக மட்டும் பேசி காசு சம்பாதித்து வருகின்றனர். சைபர் கிரைம் அதை கண்டுகொள்ளவில்லை.

தொந்தரவு செய்தவர்களை பேசினேன்

தொந்தரவு செய்தவர்களை பேசினேன்

இப்போது என்னை கைது செய்ய பிரசாரம் செய்கிறார்கள். இதை உடனே நிறுத்துங்க. இல்லாவிட்டால் இது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். என்னோட வீடியோவில் நான் தெளிவா பேசியிருக்கேன். எனக்கு தொந்தரவு செய்தவர்களை தான் நான் பேசுனேன். எந்த ஆண்கள் எனக்கு தொல்லை கொடுக்கிறார்களோ அவர்களை தான் நான் பேசியிருக்கேன். நான் பொதுமக்களை பேச வில்லை. ஆனால் மக்கள் முன்பு என்னை தவறாக காட்ட அது தவறாக வெளியே போகிறது. யூட்யூப்பில் தவறான விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த சாதியினருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளேன்

அந்த சாதியினருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளேன்

அந்த சாதியை சேர்ந்த எல்லோருக்கும் நான் என்னுடைய புராஜெக்ட்டுகளில் வாய்ப்பளிச்சிருக்கேன். அதே வீடியோவில் தொந்தரவு செய்வோர் குறித்தும் கூறியிருக்கிறேன். இந்த சின்ன விஷயத்துக்காக நாடே போர்களமா வெடிச்சு... மீரா மீதுனை அரெஸ்ட் பண்ணனும்னு சொல்றாங்க. ஓகே தாராளமா மீரா மிதுனை அரெஸ்ட் பண்ணுங்க. காந்தி, நேரு ஜெயில்க்கு போகலையா. எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை. 5 வருசமா இதை தான் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க. இன்னமும் ட்ரை பண்ணுங்க. அது எப்போதும் நடக்காது.

நான் ஒரு தமிழ் ஜாதி பெண்

நான் ஒரு தமிழ் ஜாதி பெண்

எனக்கு அப்படி ஒரு நிலை வராது. என்னை கைது செய்வது என்பது உங்கள் கனவில்தான் நடக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே வெற்றி பெற்ற ஒரு தமிழ் பெண் என்பதால் எனக்கு தொந்தரவு தருகிறார்கள். நான் ஒரு தமிழ் ஜாதி பெண் என்பதால் நான் முன்னுக்கு வர கூடாது என நான் முன்னேறினாலும் எனக்கு எதிரான தடை தருகிறார்கள். அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டுல எனக்கான பிரச்சனை நிற்கவே மாட்டேங்குது. நீங்க அதனை நிறுத்த ஆக்ஷன் எடுக்கணும்.

Recommended Video

#BREAKING நடிகை மீரா மிதுன் கைது!
கொச்சை கொச்சையா பேசுறாங்க

கொச்சை கொச்சையா பேசுறாங்க

அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் உட்கார்ந்து எனக்கு எதிரா கொச்சை கொச்சையா பேசுறாங்க அசிங்க அசிங்கமா பேசுறாங்க. நரேந்திர மோடியோட எல்லைக்குள்ள இருந்தால் இப்படி பேச முடியாது. ஒரு பெண்ணை ஆண்கள் இவ்வளவு இழிவா பேசுறதே பெரிய வன்கெடுமை. முதல்வர் அவர்களே என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் என் பெண்மையை பற்றியும் யூட்யூப்களில் தவறாக பேசுபவர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். என் குடும்ப பாதுகாப்பு, எனது பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுங்க.

என்னை பேசுவதே பெரிய கர்மா

என்னை பேசுவதே பெரிய கர்மா

இந்த மாதிரி என்னை பேசுவதே பெரிய கர்மா. இந்த கர்மாவ நீங்க எல்லாரும் அனுபவிப்பிங்க. தமிழ்நாடு என்னோட மண்... இந்த மண்ணை விட்டு நான் போகமாட்டேன். நான் ஒரு தமிழ் பெண். தமிழ் பெண் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் நான் ஜெயிச்சுட்டு தான் இருக்கேன் என்பதை மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேலயே அவ்வளவு கேஸ், அவ்வளவு வன்கொடுமை பண்ணாங்க. அவங்கள பத்தி தப்பா பேசுனாங்க. மக்களே ஒரு தமிழ் பெண் வளர்ச்சியடைவது தமிழ்நாட்டில் யாருக்கும் பிடிக்காது.

ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால்

ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால்

வேற்று மொழி பெண்கள் வேற்று மாநில பெண்கள் மட்டுமே இங்கே வளர்ச்சியடைய முடியும். இங்குள்ள ஆண்களின் ஆசைக்கு இணங்குவதால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எனக்கு ஏன் பிரச்னை வருதுன்னா... எல்லா ஆண்களும் என் மீது ஆசைப்படுவதால் தான். யாரும் இதுவரை தமிழ் பெண் இமாலய வெற்றி பெற்று, எழுச்சி பெற்று பார்க்கல. ஏன் இதெல்லாம் நடக்குதுனா... அவள் வெற்றியாளர். அவள் மீதான பொறாமை காரணமாக அவளை தடுக்கிறார்கள்.

ஜெயிலில் வைத்து கொலை செய்ய திட்டம்

ஜெயிலில் வைத்து கொலை செய்ய திட்டம்

தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டேதான் இருப்பார்கள். இது நிற்கும் காலம் ஒரு நாள் வரும். கடவுள் தண்டனை கொடுக்கும் அந்த நாளுக்காகதான் காத்திருக்கிறேன். ஒரு தமிழ் பெண் வளர்ச்சி அடைவதை யாராலும்... எவனாலும்... தடுக்க முடியாது. சமூக வலைதளங்களில் என்னை இழிவாக பேசியதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஜெயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவோ கொலை செய்யவோ திட்டம் போட்டிருக்கலாம்.

என்னிடம் மிஸ் பிஹேவ் செய்த இயக்குநர்கள்

என்னிடம் மிஸ் பிஹேவ் செய்த இயக்குநர்கள்

என்னை கைது செய்வது என்பது நடக்காத ஒன்று. கடந்த 5 ஆண்டுகளா இந்த அரெஸ்ட் டிராமாவை நான் பார்த்துட்டு இருக்கேன். சினிமாத்துறையில் என்னிடம் மிஸ் பிஹேவ் செய்த இயக்குநர்கள் குறித்து நான் மக்கள் முன்பு பேசுவேன். நான் மக்களுக்குதான் விளக்கம் கொடுக்க வேண்டும். நான் காம்ப்ரமைஸ் செய்யாததால் எனக்கு இண்டஸ்ட்ரியில் என்ன நேர்ந்தது என்பது மக்களுக்கு தெரியப்படுத்துவேன். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.. இவ்வாறு நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X