என்னால முடியல.. தினமும் 20 மாத்திரை.. நீதிமன்றத்தில் கதறல்.. வாயால கெட்ட மீரா மிதுன்!
சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன், வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தின் கீழ் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாடல் அழகியான மீரா மீதுன் தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் சாதி வெறியுடன் பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவானது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க என புகார் அளித்தார்.

நடிகை மீரா மிதுன்: அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன், ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின் நேரில் ஆஜராகாமல் மீரா மிதுன் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, டெல்லியில் பதுங்கி இருந்த மீரா மிதுனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் பதுங்கி இருந்தார்: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில், வழக்கறிஞர் சுதாகர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், அவரை சென்னை அழைத்துவர இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், உடல் நலம் மேம்பட்டு, பயணத்திற்குத் தகுதியானவர் என மருத்துவர்கள் சான்று பெற்று, நேரில் ஆஜர்படுத்துவதாக கூறி காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தினமும் 20 மாத்திரைகள்: இந்நிலையில் நடிகை மீரா மிதுன், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் எனது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளழது. இதனால், என்னால் விசாரணையை எதிர்கொள்ள முடியவில்லை என வழக்கை ரத்து செய்யும் படி மனுவில் கோரிக்கை வைத்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த செய்தியை இணையத்தில் வெளியான நிலையில், இது எல்லாம் மீரா மிதுனின் வாயால் வந்த வினை என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











