மினி ஸ்கர்ட்.. ஷார்ட் டாப்.. கவர்ச்சி தூக்கலாக காட்டில் சாமி கும்பிட்ட மீராமிதுன்! வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகையும் மாடலுமான மீரா மிதுன் காட்டில் சாமி கும்பிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். இவர் திருமணமானதை மறைத்து, வயது குறித்து தவறான தகவலை அளித்தது, மற்றும் அழகி போட்டி நடத்துவதாக பலரிடம் பண மோசடி செய்தது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக அழகிப்பட்டம் அவரிடம் இருந்து திரும்பப்பெறப்பட்டது.
மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன்.

மக்கள் கோபம்
அதில் சேரன் மீது கூறிய தவறான குற்றச்சாட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன்.

மீரா மிதுன் வீடியோ
மேலும் கவர்ச்சி போட்டோக்கள், கவர்ச்சி வீடியோக்கள், பப்பில் ஆண் நண்பர்களுடன் ஆடும் செக்ஸி ஆட்டம் என அவரது சமூக வலைதள பக்கத்தையும் சூடாக வைத்திருக்கிறார் மீரா மிதுன். இந்நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

காட்டில் கவர்ச்சி லுக்
அதில் தொடைக்கு மேல் தெரியும் வகையிலான மினி ஸ்கர்ட், வயிறு தெரியும்படியான ஷார்ட் டாப் அணிந்து கவர்ச்சி லுக்கில் காட்டுக்குள் செல்கிறார் மீராமிதுன். பின்னர் அங்கிருக்கும் சாமியை வணங்கிவிட்டு வருகிறார் மீரா மிதுன்.
சாமி கும்பிட்ட மீரா
இதனை அவருடன் சென்றுள்ள ஆண் ஒருவர் படம்பிடித்துள்ளார். அவர் கூறியபடியே மீராமிதுன் சாமி கும்பிடுகிறார் என்பது வீடியோவில் கேட்கும் ஆடியோவில் தெரியவந்துள்ளது.

அங்கேயே இருங்கள்
மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரை விளாசியுள்ளார். காட்டுக்குள்ளேயே இருந்துவிடுங்கள், மீண்டும் ஊருக்குள் வந்துவிடாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
சேரன் மீதான, குற்றச்சாட்டு தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன் என்ன செய்தாலும் அவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











