வரும் காதலர் தினத்தில் திருமணம்.. ஆனா மாப்பிள்ளை பத்தி சொல்ல முடியாது.. மீரா மிதுன் அதிரடி!

சென்னை: நடிகை மீரா மிதுன் தனக்கு வரும் காதலர் தினத்தன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Meera Mithun Marriage • Official Statement | Bigg Boss, Thaana Serntha Kootam

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன். நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். இருப்பினும் சில சர்ச்சைகள் மற்றும் புகார்களால் அவருக்கு வழங்கப்பட்ட அழகி பட்டம் திரும்பப்பெறப்பட்டது.

நெகட்டிவ் ரீச்

நெகட்டிவ் ரீச்

ஆனாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். குறிப்பாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் நெகட்டிவ் ரீச் கிடைத்தது.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

சமூக வலைதளங்களில் படு சுறுசுறுப்பாக இருக்கும் மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெயரை கெடுத்துக் கொண்ட மீரா மிதுன் என்ன போஸ்ட் செய்தாலும் கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

திட்டி தீர்த்து வருகின்றனர்..

திட்டி தீர்த்து வருகின்றனர்..

குறிப்பாக கவர்ச்சி போட்டோக்களை ரகம் ரகமாக அள்ளிவிட்டு வருகிறார். அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் படு மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலை படாத மீரா மிதுன் நிர்வாணம், அரை நிர்வாணம், அரை குறை உடை, டாப் லெஸ் என தன்பாட்டுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

மணக்கோலத்தில்..

மணக்கோலத்தில்..

இந்நிலையில் கடந்த சில நாட்களாய் சமூக வலைதளங்களின் பக்கம் தலைக்காட்டாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணக்கோலத்தில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரீஎன்ட்ரி கொடுத்தார். இது உண்மை என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

மீரா மிதுன் தகவல்

மீரா மிதுன் தகவல்

இதனை தொடர்ந்து மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள மீரா மிதுன், தனக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான் என கூறியுள்ளார். மேலும் தனது திருமணம் குறித்த சில ரகசியங்களையும் தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறியுள்ளார். மேலும் மீரா மிதுன் தனது திருமண தேதியையும் அறிவித்துள்ளார். இதற்கு முன் சந்திக்காத அந்த மகிழ்ச்சியை ஒரு சாதாரண பெண்ணை போல அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.

திருமண தேதி

திருமண தேதி

அடுத்த வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் திருமணம் நடக்கவுள்ளது. ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர் குறித்த தகவலையும் நான் சொல்லப் போவதில்லை. எனது வாழ்க்கையின் பெரிய நாளான திருமண நாள் வரை அதை பர்சனலாக வைத்திருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

லாக்டவுன் நேரம்

லாக்டவுன் நேரம்

மேலும் லாக்டவுன் இடைவெளி எனது வாழ்க்கையின் சிறந்த பகுதியாக மாறியுள்ளது என்றும் புகழ் மற்றும் அதிகாரத்தில் மூழ்கி, பிரபலம் என்ற அந்தஸ்தில் மூழ்கி, எனது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதையை நான் முற்றிலும் இழந்துவிட்டேன். இந்த லாக்டவுன் எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாருங்கள் என எழுப்பிவிட்டுள்ளது என கூறியுள்ளார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

தமிழ்ச்செல்வி என்ற பெயரை கொண்ட மாடலிங்குக்காக மீரா மிதுன் என மாற்றிக்கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் ஒரே நாளில் அவரது திருமண உறவு முறிந்து விட்டது. தற்போது அவருக்கு நடக்க இருப்பது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X