Trisha - பிடிக்காவிட்டாலும்.. திரிஷாவை தொட்டு விளையாடிய நடிகர்.. நடிகை வேதனை

சென்னை: Trisha (த்ரிஷா) பிரபல நடிகர் ஒருவர் த்ரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டார் என்று நடிகை மீரா மிதுன் தெரிவித்திருக்கிறார்.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலை காண்பித்தவர் த்ரிஷா. அதன் பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்து கனவுக்கன்னியாக மாறினார். அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.

 Actress Meera Mithun has said that a famous actor touched Trisha in Shooting Spot

முன்னணி ஹீரோயின்: கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை வளர்த்தார். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், கமல், விக்ரம், சூர்யா,சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார்.இதனால் கோலிவுட்டில் த்ரிஷாவின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக இன்றுவரை அவர் லைம் லைட்டில் இருப்பது கவனிக்கத்தக்கது.

தெலுங்கிலும் முன்னணி: தமிழில் எப்படி முன்னணி ஹீரோயினாக ஜொலித்தாரோ அதேபோல் தெலுங்கிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். அங்கு தொடர்ந்து நிலைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கு அங்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தெலுங்கு போலவே ஹிந்தியிலும் தனது தடத்தை பதித்தார். ஆனாலும் தமிழ் கொடுத்த சப்போர்ட் போல் தெலுங்கோ, ஹிந்தியோ அவருக்கு கொடுக்கவில்லை.

மீண்டும் ஃபார்ம்: த்ரிஷா மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவை கதாபாத்திரத்தில் கலக்கினார். அந்தப் படத்தை தொடர்ந்து லியோ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.மேலும் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் த்ரிஷாதான் ஹீரோயின் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப் படங்கள் தவிர்த்து கௌரவ் நாராயணன் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கிறார் த்ரிஷா.

 Actress Meera Mithun has said that a famous actor touched Trisha in Shooting Spot

மீரா மிதுன்: இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து மீரா மிதுன் கூறியிருக்கும் விஷயம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "த்ரிஷா நடித்துக்கொண்டிருந்த படத்தில் சின்ன வேடத்தில் நான் நடித்தேன். அப்போது அந்த செட்டில் த்ரிஷாவை பிரபல நடிகர் ஒருவர் தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.

பிடிக்கவில்லை: அது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் கோபப்பட்டு கத்திவிட்டால் பட வாய்ப்பு பறிபோகும் என அமைதியாக இருந்துவிட்டார். முன்னணி நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதாரண நடிகைகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்" என்றார். மீரா மிதுன் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவை கடுமையாக விமர்சித்திருந்தார். த்ரிஷா இப்படி தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்கு அவரது சாதிதான் காரணம் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X