பிரஸ் மீட்டுக்கு முன்பாக மவுன அஞ்சலி செலுத்திய மீரா மிதுன்.. யாருக்குன்னு பாருங்க!
சென்னை: நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை மீரா மிதுன் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு பிரஸ் மீட்டை தொடங்கினார்.
அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் கடுப்பான நடிகை மீரா மிதுன் இனி தமிழ் சினிமாவே வேண்டாம் எனக்கூறி மும்பை சென்றார். பாலிவுட் படங்களில் நடிப்பதாக கூறிய அவர் இதுதொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.
தற்போது தமிழகம் வந்துள்ள அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனக்கு கொடுக்க வேண்டிய பேமென்டில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
சுஜித்துக்கு அஞ்சலி
முன்னதாக பிரஸ் மீட்டை தொடங்கும் முன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்காக மவுன அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா மிதுன், சுஜித்தை தான் மிஸ் செய்துவிட்டதாகவும், இப்போது என்னுடைய கடவுள்களில் நீயும் ஒருவர் என தெரிவித்திருக்கிறார்.

அரசியலுக்கு வருவது உறுதி
தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது உறுதி, எந்தக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்பது குறித்து இப்போது பேசவில்லை என்றார்.

விளாசல்
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, மீட்புப்பணிகள் நடைபெற்றபோது தமிழக அரசை கடுமையாக சாடினார் மீரா மிதுன். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு தமிழக அரசை விமர்சித்த அவரை நெட்டிசன்கள் விளாசினர்.
அதிமுக பிரமுகர்கள்
ஆனால் நடிகர் சரவணன் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மீரா மிதுன், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏகள் மற்றும் அக்கட்சியின் பிரமுகர்களை சந்தித்து வணக்கம் கூறினார்.

திட்டவட்டம்
இதுதொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில வெளியிட்டிருந்தார் மீராமிதுன். இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











